பணவீக்கத்தைச் சமாளிக்க மேலும் வட்டி விகிதத்தை அதிகரிக்கும் அமெரிக்கா

அமெரிக்க மத்திய வங்கி அதன் வட்டி வகிதத்தை மேலும் முக்கால் விழுக்காட்டுப் புள்ளி அதிகரித்துள்ளது. வட்டி விகிதம் இந்த ஆண்டு அதிகரிக்கப்படிருப்பது இது நான்காம் முறை.

40 ஆண்டு காணாத பண வீக்கத்தைச் சமாளிக்க அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மத்திய வங்கி கொடுக்கும் கடனுக்கான வட்டி விகிதம் இனி இரண்டே கால் விழுக்காட்டிற்கும் இரண்டறை விழுக்காட்டிற்கும் இடைப்பட்டிருக்கும்.

அமெரிக்க மத்திய வங்கியின் இந்த முடிவு, பணவீக்கத்தைக் குறைக்க உதவும்.ஆனால் ஏற்கனவே அதிகரித்திருக்கும் பொருள்கள், சேவைகளின் விலைகள் இனி மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

விலை அதிகரிப்பால் ஏற்படும் நெருக்கடி மட்டுப்படாவிட்டால், வரும் செப்டம்பர் மாதம் மேலும் ஒரு  “வழக்கத்துக்கு மாறான அதிகரிப்பை” எதிர்பார்க்கலாம் என்று மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பொவல் (Jerome Powell) எச்சரித்தார்.

 

-smc