ஈராக் பாராளுமன்றத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்திய மக்கள்

முகமது அல்-சூடானி புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடைபெறுகிறது. முகமது ஈரானுக்கு மிகவும் நெருக்கமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

ஈராக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த தேர்தலில் அல்-சதருடைய கட்சி 73 இடங்களைக் கைப்பற்றி அதிக வாக்குகள் பெற்ற கட்சியாக திகழ்ந்தது. எனினும் ஆட்சிப் பொறுப்பு ஏற்பது பற்றி கட்சிகளுக்கு இடையே இருந்த சிக்கல்கள் காரணமாக இழுபறி நீடித்தது.

இதற்கிடையே, முகமது அல்-சூடானி புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டார். இதனை எதிர்த்து அல்-சதருடைய ஆதரவாளர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். ஏனெனில் பிரதமர் வேட்பாளராக உள்ள முகமது ஈரானுக்கு மிகவும் நெருக்கமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இந்த வாரத்தில் தொடர்ந்து 2-வது முறையாக நூற்றுக்கணக்கானோர் மீண்டும் பாராளுமன்றத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினர். பாராளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டு ஷியா தலைவர் முக்தாதா அல்-சதர் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பிரதமர் முஸ்தபா, போராட்டத்தை உடனே கைவிடும்படி கேட்டுக்கொண்டார்.

சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் பாதுகாத்துக் கொள்ளுமாறு வீரர்களுக்கு உத்தரவிட்டார். பாதுகாப்பு பணியில் உள்ள வீரர்கள் அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

 

-mm