ஆளில்லா வானூர்தி கொண்டு கடற்படை அணித் தலைமையகம் மீது உக்ரேன் தாக்குதல் : ரஷ்ய அதிகாரி குற்றச்சாட்டு

உக்ரேன், கருங்கடலில் உள்ள ரஷ்யக் கடற்படை அணியின் தலைமையகம் மீது ஆளில்லா வானூர்தி கொண்டு தாக்குதல் நடத்தியிருப்பதாக ரஷ்ய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கடற்படை தினத்தைக் குறிக்கத் திட்டமிடப்பட்ட கொண்டாட்டங்களுக்கு முன்னதாக உக்ரேன் இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார். தாக்குதலில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் கடற்படை தினக் கொண்டாட்டங்களைப் பார்வையிடவிருந்த சில மணிநேரத்துக்கு முன்பு இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது.

அடையாளம் தெரியாத பொருள் கருங்கடல் கடற்படைத் தலைமையகத்தின் முன்புறம் பறந்தது என்று Sevestopol நகரின் ஆளுநர் Mikhail Razvozhayev டெலிகிராம் குறுந்தகவல் சேவை மூலம் தெரிவித்தார்.முதற்கட்டத் தகவல்படி அது ஆளில்லா வானூர்தி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

தங்கள் கடற்படை தின கொண்டாட்டங்களைத் தடுக்கவே உக்ரேன் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளது என்று ஆளுநர் Mikhail சாடினார்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக அனைத்துக் கொண்டாட்டங்களும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்கள் அனைவரும் பாதுக்காப்பாக வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இத்தாக்குதல் குறித்து உக்ரேன் எந்தவிதக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

 

 

-smc