‘சர்ச்சைக்குரிய’ போலிஸ்காரர்களை பணியில் நியமிக்க சபா,சரவாக் குப்பை கொட்டும் இடமில்லை

தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்ததாக விசாரணையில் உள்ள காவல்துறை அதிகாரிகளை மத்திய அரசு சபா மற்றும் சரவாக்கிற்கு இடமாற்றம் செய்ததை சபாவின் எதிர்க்கட்சி எம்.பி கடுமையாக விமர்சித்துள்ளார்.

சபா மற்றும் சரவாக் குப்பை கொட்டும் இடங்கள் அல்ல, என்று இஸ்னாரைசா முனிரா மஜிலிஸ் கூறினார்.

“ஏற்கனவே, உள்கட்டமைப்பில் நாங்கள் பின்தங்கியுள்ளோம், இப்போது நீங்கள் பிரச்சனைக்குரியவர்களை பொது மக்களுக்கு சேவை செய்ய அனுப்புகிறீர்கள்.

“நாங்கள் எப்படி முன்னேற முடியும்? எங்களை இப்படி நடத்துவதை நிறுத்துங்கள்” என்று கோட்டா பெலுட் எம்.பி ஒரு முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

சிலாங்கூரில் உள்ள கோம்பாக்கில் தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்ததற்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஒன்பது காவல்துறை அதிகாரிகள் சபா மற்றும் சரவாக்கிற்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக இன்று அதிகாலை செய்திகள் வெளியாகின.

போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த காவலர்கள் முதல் துணை காவலர்கள் வரையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

-FMT