காமன்வெல்த் போட்டி- இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

தமிழகத்தை சேர்ந்த சரத்கமல், சத்யன் ஞானசேகரன் அடங்கிய இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. காமன்வெல்த் 96 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் விகாஷ் தாகூர் வெற்றி.

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 4 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 10 பதக்கங்களை வென்றுள்ளது.

இந்நிலையில், காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது. இதில், தமிழகத்தை சேர்ந்த சரத்கமல், சத்யன் ஞானசேகரன் அடங்கிய இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. சிங்கப்பூர் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 3- 1 என்ற கணக்கில் இந்திய அணி அபாரமாக வெற்றிப்பெற்றுள்ளது.

தொடர்ந்து, காமன்வெல்த் 96 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் விகாஷ் தாகூர் வெற்றி பெற்றார். 96 கிலோ எடைப் பிரிவில் மொத்தமாக 191 கிலோ எடையை தூக்கி விகாஷ் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி வென்றார்.

 

-mm