செஸ் ஒலிம்பியாட் 5வது சுற்று- தமிழக வீரர்கள் அபிமன்யு, நந்திதா வெற்றி

4 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், இன்று 5வது சுற்றுக்கான போட்டி நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய மகளிர் அணி சி பிரிவில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி.

சர்வதேச செஸ் கூட்டமைப்பு, இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழக அரசு சார்பில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர்.

ஆண்கள் பிரிவில் 188 அணிகளும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் கலந்து கொண்டுள்ளன. ஏற்கனவே, 4 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், இன்று 5வது சுற்றுக்கான போட்டி நடைபெற்றது. இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய மகளிர் அணி சி பிரிவில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றிப் பெற்றுள்ளார்.

பிரேசில் வீராங்கனையை எதிர்கொண்டபோது 32வது நகர்த்தலில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றிப் பெற்றுள்ளார். தொடர்ந்து, செஸ் ஒலிம்பியாட் தொடரின் 5வது சுற்றில் இந்திய வீரர் அபிமன்யு வெற்றி பெற்றுள்ளார்.

 

-mm