நட்பின் அடிப்படையில் சீன கப்பல் பிரச்சினைக்கு தீர்வு!பிரதமர் உறுதி

நட்பின் அடிப்படையில் சீன கப்பல் பிரச்சினைக்கு தீர்வைக்காண முயல்வதாக இலங்கையின் பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

சீனாவின் ‘யுவான் வாங் 5’ என்ற சீனக் கப்பலானது ஆகஸ்ட் 11-17 வரை இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ‘எரிபொருள் நிரப்புதலுக்காக’ நிறுத்தப்படும் என்றும்,ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் வடமேற்கு பகுதியில் செயற்கைக்கோள் கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி கண்காணிப்பை மேற்கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தெற்கு ஆழ்கடல் துறைமுகமான ஹம்பாந்தோட்டை அதன் இருப்பிடத்திற்கு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

இந்நிலையில், இரு நாடுகளும் எங்கள் நெருங்கிய நண்பர்கள், நாங்கள் நட்பு அணுகுமுறையுடன் பிரச்சினையைத் தீர்க்க முயற்சிப்போம் என்று தினேஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சீனக் கப்பல் எரிபொருள் நிரப்பும் பயணத்தை மட்டுமே கேட்டதாக வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கப்பலின் பிரச்சினையை சுமுகமாக தீர்த்துக்கொள்ள முடியும் என அமைச்சரவையில் உறுதியளித்துள்ளதாக தினேஸ் குணவர்தன கூறியுள்ளார்.

 

 

-tw