ஜூலை மாதத்தில் உலகளாவிய உணவுப் பொருட்களின் விலை மீண்டும் குறைந்துள்ளது – ஐ.நா

ஐக்கிய நாடுகளின் உணவு ஏஜென்சியின் உலக விலைக் குறியீடு ஜூலை மாதத்தில் மீண்டும் சரிந்தது, மார்ச் மாதத்தில் எட்டப்பட்ட சாதனைகளில் இருந்து அது மேலும் விலகிச் சென்றது.

உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) உணவு விலைக் குறியீடு, உலகளவில் அதிகம் வர்த்தகம் செய்யப்படும் உணவுப் பொருட்களைக் கண்காணிக்கும். கடந்த மாதம் சராசரியாக 140.9 புள்ளிகள் ஆகும். ஜூன் மாதத்திற்கான திருத்தப்பட்ட நிலை 154.3 புள்ளிகள்.

உக்ரைன் படையெடுப்பு, பாதகமான வானிலை மற்றும் அதிக உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவுகள் ஆகியவற்றின் தாக்கத்தால், ஜூலை குறியீட்டு எண் இன்னும் 13.1 சதவீதம் அதிகமாக இருந்தது.

“உணவுப் பொருட்களின் விலைகள் மிக அதிக அளவில் இருந்து குறைந்து  வருவது வரவேற்கத்தக்கது, இருப்பினும், பல நிச்சயமற்ற நிலைகள் உள்ளன” என்று FAO தலைமைப் பொருளாதார நிபுணர் மாக்சிமோ டோரெரோ கூறினார்.

ஒரு இருண்ட உலகளாவிய பொருளாதாரக் கண்ணோட்டம், நாணய ஏற்ற இறக்கம் மற்றும் அதிக உர விலைகள் போன்றவை எதிர்கால உற்பத்தியையும் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்.

இவை அனைத்தும் உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கு கடுமையான சவால்களை ஏற்படுத்துகின்றன என்றார்.

சமையல் எண்ணெய், சர்க்கரை, பால் பொருட்கள், இறைச்சி மற்றும் தானியங்களின் விலைக் குறியீடுகள் அனைத்தும் ஜூலை மாதத்தில் மாதந்தோறும் சரிந்தன, கோதுமை 14.5 சதவீதம் சரிந்தது.

உக்ரைன், ரஷ்யா, துருக்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றுக்கு இடையே தானியங்கள் கருங்கடல் துறைமுகங்கள் வழி ஏற்றுமதிக்கு தடைகள் அகற்றப்பட்ட ஒப்பந்தம் ஓரளவுக்கு காரணமாகும்..

மக்காச்சோள விலைக் குறியீடு ஜூலையில் 10.7 சதவீதம் சரிந்தது, ரஷ்யா-உக்ரைன் ஒப்பந்தம் மற்றும் முக்கிய உற்பத்தியாளர்களான அர்ஜென்டினா மற்றும் பிரேசிலில் இருந்து பருவகால அறுவடை அதிகரித்தது  காரணமாகும்.

மொத்தம் 58,041 டன் சோளத்தை ஏற்றிச் செல்லும் மூன்று கப்பல்கள் வெள்ளிக்கிழமை உக்ரைன் துறைமுகங்களை விட்டு வெளியேற அங்கீகரிக்கப்பட்டதாக அந்த நடவடிக்கையை ஏற்பாடு செய்யும் அமைப்பு தெரிவித்துள்ளது. உக்ரேனிய தானியங்களை ஏற்றிச் சென்ற முதல் கப்பல் ஒடேசாவில் இருந்து திங்கள்கிழமை புறப்பட்டதாம்.

  • ராய்ட்டர்ஸ்