ஊடகவியலாளர்கள் கொலை வழக்கில் இலங்கையின் முன்னாள் அரசாங்கத்திற்கு எதிராக தீர்ப்பு

இலங்கையில் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் இலங்கையின் முன்னைய அரசாங்கம் குற்றம் இழைத்துள்ளதாக நெதர்லாந்தின் ஹேக் மக்கள் நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் பிரதான சாட்சியாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பரிசோதகர் நிஷாந்த சில்வா சாட்சியம் வழங்கியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானப்படைக்கு மிக் ரக விமானங்களை கொள்வனவு செய்தமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், கையடக்க தொலைபேசி கோபுரங்களில் பதிவாகியிருந்த இலக்கங்களில் இருந்து இந்த தகவல்கள் தெரியவந்ததாகவும் அவர் சாட்சியமளித்துள்ளார்.

இந்த கொலைகளுக்கு இராணுவத்தின் திரிபோலி பகுதியே காரணம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இலங்கை அரசின் சார்பில் எந்த ஒரு சட்டத்தரணியும் மக்கள் நீதிமன்றத்தில் முன்னிலை ஆகவில்லை என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

-mm