உக்ரேன் அணுசக்தி நிலையத் தாக்குதல் – மோசமாகச் சேதமடைந்த கட்டமைப்பு வாசிப்புநேரம் – 1 நிமிடம்

உக்ரேனில் அணுசக்தி நிலையம் தாக்கப்பட்டதில் அதன் கட்டமைப்பு மோசமாகச் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன் ஓர் அணு உலையை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அந்த வட்டாரத்தில் கதிர்வீச்சு கசிந்திருக்கலாம் என்றும் தீச் சம்பவம் ஏற்படும் அபாயம் அதிகம் என்றும் கூறப்பட்டது.ஸபோரிசா (Zaporizhzhia) நகரில் உள்ள அதுவே ஐரோப்பாவின் ஆகப்பெரிய அணுச்சக்தி நிலையம்.

அங்கு நடந்த தாக்குதலுக்கு ரஷ்யாவும் உக்ரேனும் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டி வருகின்றன.இயங்கிக் கொண்டிருக்கும் அணு உலை மீது நடத்தப்படும் தாக்குதலின் விளைவு அணுகுண்டுத் தாக்குதலுக்குச் சமமானது என்று உக்ரேன் எச்சரித்தது.

பிப்ரவரி மாதம் போர் தொடங்கிய முதல் வாரத்திலேயே அந்த அணுசக்தி நிலையத்தை ரஷ்யா கைப்பற்றிவிட்டது.

 

 

-smc