குவான் எங் வழக்கு சம்பந்தப்பட்ட புலனசெய்தி தொகுப்பை அரசாங்க தரப்பு அழித்ததில் வழக்கறிஞர் ஆவேசம்

பினாங்கு முன்னாள் முதல்வர் லிம் குவான் எங்-இன் வழக்கறிஞர், முக்கிய அரசு தரப்பு சாட்சி மற்றும் ஒரு தொழிலதிபருக்கு இடையேயான வாட்ஸ்அப் செய்திகளின் அச்சுப் பிரதிகளை அதிகாரிகள் அழித்தது, ​​ஆதாரங்கள் மறைக்கப்பட்டதிற்கு ஒப்பாகும் என்று வாதாடினார்.

புலன செய்திகளின் அச்சுப் பிரதிகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் துணை அரசு வழக்கறிஞர் வான் ஷஹாருதீன் வான் லாடின் கூறியதை அடுத்து, எதிர் தரப்பு  வழக்கறிஞர் கோபிந்த் சிங் தியோ இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

வர்த்தகர் ஜி ஞானராஜாவுக்கு எதிரான தனியான மோசடி வழக்கில் பயன்படுத்தப்பட்ட அந்தச் செய்தியின் அச்சுப் பிரதிகள் அழிக்கப்படுவது வழக்கமான நடைமுறை என்று அரசுத் தரப்பு வாதிட்டது.

கன்சோர்டியம் ஜெனித் கன்ஸ்ட்ரக்ஷன்  மூத்த நிர்வாகி சாருல் அமாட் 19 மில்லியன் ரிங்கிட் மோசடி செய்ததாக ஞானராஜாவுக்கு எதிரான ஷா ஆலம் செஷன்ஸ் கோர்ட் வழக்கின் அடிப்படையில் கோபிந்த் முன்பு செய்தி அச்சுப் பிரதிகளை நாடினார். பினாங்கு கடலுக்கடியில் சுரங்கப்பாதை திட்டம் தொடர்பான ஊழல் வழக்கில் லிம் ஈடுபடவில்லை என்பதற்கு அவை ஆதாரமாகும்.

“வாட்ஸ்அப் (பிரிண்ட்அவுட்கள்) துண்டு துண்டாக்கப்பட்டதாக எனது நண்பர் இன்று எனக்குத் தெரிவித்தார். வாட்ஸ்அப் செய்திகளைப் பொறுத்தவரை, நீங்கள் (காகித  அச்சுப்பொறி) நகல்களை துண்டாக்கலாம் ஆனால் (உண்மையான மின்னணு) செய்திகளை நீங்கள் துண்டாக்க முடியாது.என்றார்.

“ஆதாரங்கள் அழிக்கப்பட்டன என்ற நிலைப்பாட்டை நாங்கள் எடுக்கிறோம். இந்தச் செய்திகள் RM19 மில்லியன் செலுத்துவதற்கு வழிவகுக்கும் நிகழ்வுகளைப் புரிந்துகொள்வதில் முக்கியமானவை, இது இந்த வழக்குக்கு நேரடியாகப் பொருந்தும்,” என்று கோபிந்த் கூறினார்.

வழக்கறிஞரால் முதன்மை ஆதாரத்தை (வாட்ஸ்அப் பிரிண்ட்அவுட்கள்) சமர்ப்பிக்க முடியாவிட்டால், அவர்கள் இரண்டாம் நிலை ஆதாரத்தை நீதிமன்றத்தில் கொண்டு வர வேண்டும், அதாவது விசாரணையின் போது சாட்சியிடம் அந்த நகல்களை  காட்டும்போது எம்ஏசிசி ஜாருலிடமிருந்து பதிவு செய்த அறிக்கையை நீதிமன்றத்தில் கொண்டு வர வேண்டும் என்று வழக்கறிஞர் கூறினார்.

இதற்கு முன்பு,  அப்போதைய பினாங்கு முதலமைச்சருக்கு லஞ்சம் கொடுப்பதற்காக, அப்போதைய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் நெருங்கிய கூட்டாளி என்று கூறப்படும் ஞானராஜாவிடம் 19 மில்லியன் ரிங்கிட் கொடுத்ததாக ஜாருல் கூறினார்.

ஏப்ரல் 3, 2019 அன்று, ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இந்தத் திட்டம் தொடர்பாக 19 மில்லியன் ரிங்கிட் கொடுக்குமாறு ஜாருலை ஏமாற்றியதாக ஞானராஜா மீது குற்றம் சாட்டப்பட்டது.

தொழிலதிபர் ஜி ஞானராஜா

இந்தத் திட்டம் தொடர்பாக பிந்தையவருக்கு எதிரான எம்ஏசிசியின் விசாரணைகளை மூடுவதற்கு அவரது அரசியல் தொடர்புகளைப் பயன்படுத்த முடியும் என்று ஞானராஜா சாருலை நம்பவைத்ததாகக் கூறப்படுகிறது.

நேற்றைய தினம், சருல் சாட்சியமளிக்கையில், பணமோசடி குற்றத்திற்காக நீதிமன்றத்தில் தன் மீது குற்றஞ்சாட்டப்படும் என்று  ஞானராஜாவால்  அச்சுறுத்தப்படதாக சாருல் க்றினார்.

நீதிமன்றத்திற்கு தொலைபேசியைக் கொண்டு வாருங்கள்

சாருலுக்கும் ஞானராஜாவுக்கும் இடையிலான உரையாடல் தொடர்பாக குறுக்கு விசாரணையின் போது சாட்சி பொய் சொல்லும் பட்சத்தில் புலனசெய்தி அச்சிடுதல் அவசியம் என்று கோபிந்த் வாதிட்டார்.

நீதிபதி அஸுரா பின்னர் தொலைபேசியை நீதிமன்றத்தில் சமர்பிக்கவௌம் அதனை, அதைத் திறக்க முயற்சிக்க கோரி தரப்பிணர்களுக்கு  ஆலோசனையும் வழங்கினார்.

CZC மூத்த நிர்வாகி ஜாருல் அஹ்மத் முகமட் சுல்கிஃப்லி