காற்பந்து: பேராக் கிளந்தனை தோற்கடித்தில் ரசிகர்கள் ஆவேசம்,   மூவர் கைது

மலேசியா பிரீமியர் லீக் ஆட்டம் நேற்று கிளந்தான் மற்றும் பேராக் இடையே கோத்தாபாருவில் ஒரு காட்டமான சூழலில் முடிந்தது.

மைதான படையெடுப்பு, சச்சரவுகள், அடிதடி அதோடு மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பேராக் கிளாந்தனை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த பிறகு இரு தரப்பு ஆதரவாளர்களும் ஒருவரையொருவர் தூண்டிவிட்டதாக பல்வேறு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆதரவாளர்களிடையே பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பிற பொருட்கள் வீசப்பட்டதாகவும், வருகை தந்த ரசிகர்கள் பயன்படுத்திய பேருந்தின் கண்ணாடிகள் கற்களால் சேதப்படுத்தப்பட்டதாகவும் தி சன் செய்தி வெளியிட்டுள்ளது.

வெளி மாநிலத்தில் இருந்து வருகை தந்த ரசிகர்கள், வீசி எறியும் பொருட்களால் தாக்கப்பட்ட பின்னர் மைதானத்தை கட்டி படுத்திய உள்ளூர் ரசிகர்கள் சூழ்நிலையை கட்டுப்படுத்தினர் என்று சினார் ஹரியான் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, மைதானத்திற்கு வெளியே திரண்ட ரசிகர்கள், வெளியில் இருந்த கூட்டத்தை கலைக்கும் வரை பார்வையாளர்களை வெளியே செல்ல விடாமல் தடுக்க போலீசாரை கட்டாயப்படுத்தினர்.