கோட்டாபய எங்கு சென்றாலும் நீதிக்கான போராட்டம் தொடரும் ! – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியுமாகிய கோட்டாபய ராஜபக்ச எந்த நாட்டுக்கு சென்றாலும், உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் அவரைகைது செய்யக்கோரும் நீதிக்கான போராட்டம் தொடரும் என நாடு கடந்த தமிழீழஅரசாங்கம் அறிவித்துள்ளது.

இரவோடு இரவாக நாட்டை விட்டு வெளியேறி மாலைதீவூடாக சிங்கப்பூரில் சென்று, அங்கிருந்து தற்போது தாய்லாந்துக்கு செல்வதாக நா.தமிழீழ அரசாங்கம் இதனை தெரிவித்துள்ளது.

தாய்லாந்து சட்டமா அதிபரை நோக்கி கையெழுத்து போராட்டம்

இந்நிலையில், சிங்கப்பூர் சட்டமா அதிபரை நோக்கி முன்னெடுக்கப்பட்டிருந்த கையெழுத்துப் போராட்டம், தாய்லாந்து சட்டமா அதிபரை நோக்கியதாக மாற்றம் செய்யப்படுவதோடு, முன்னராக பெறப்பட்ட கையொப்பங்கள் நீதிக்கான நோக்கத்தின் அடிப்படையில் இதனோடு இணைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், http://tgte-us.org/ இணையப்பக்கத்துக்கு சென்று (தொடுப்பு : https://tgte-us.org/?page_id=4340 ) இலகுவாக ஒப்பமிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, நீதிக்கான போராட்டத்தில் அனைவரையும் பங்கெடுக்குமாறும் கோரியுள்ளது.

 

 

-tw