அமெரிக்காவில் ஒரு மில்லியன் உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சைகள் – சிறுநீரகங்களுக்கான தேவை அதிகம்

அமெரிக்காவில் 1954ஆம் ஆண்டு தொடங்கி மொத்தம் ஒரு மில்லியன் உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அங்கு முதன்முதலில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை 1954ஆம் ஆண்டு செய்யப்பட்டது.

அதிகமானோர் உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சைகளை நாடுவதால் உடல் உறுப்புகளைத் தானம் செய்பவர்களுக்கான தேவையும் உயர்ந்துள்ளதாக The Guardian செய்தி நிறுவனம் கூறியது.

அதை அடுத்து உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சைக்கு ஆதரவு தெரிவிப்போர், வரும் ஆண்டுகளில் மேலும் ஒரு மில்லியன் உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்வதை இலக்காக அறிவித்துள்ளனர்.

சென்ற ஆண்டு மட்டும் அமெரிக்காவில் சுமார் 41,360 உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.உறுப்பு மாற்றப்பட்ட 400,000க்கும் அதிகமானோர் அமெரிக்காவில் வாழ்ந்துவருவதாக The Guardian கூறியது.

எனினும், 105,000 பேர் மாற்று உறுப்புகளுக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.அவ்வாறு காத்திருப்போரில் தினமும் 17 பேர் இறந்துபோவதாக AP செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அமெரிக்காவில் தற்போது சிறுநீரகங்களுக்கான தேவையே அதிகமாக உள்ளது.

 

 

-smc