பொதுத்தேர்தலுக்குப் பிறகு அதிகாரப் பகிர்வுக்குத் தயாராக இருங்கள் என்கிறார் ஜையிட்

அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு மற்ற அரசியல் கட்சிகளுடன் ஒத்துழைக்கவும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளவும் அம்னோ தயாராக இருக்க வேண்டும் என்று முன்னாள் சட்ட அமைச்சர் ஜையிட் இப்ராஹிம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாரிசான் நேஷனல் எல்லைக்கு வெளியே உள்ள கட்சிகளுடன் ஒத்துழைக்கத் முடிவுசெய்வது உட்பட, தேர்தல்களில் சிறப்பாகச் செயல்பட வேண்டுமானால் அம்னோ மாற வேண்டும்.

“தேர்தலுக்குப் பிறகு இந்த ஒத்துழைப்பை உருவாக்குவதை நான் விரும்புகிறேன். பொருளாதாரம், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் அதே இலட்சியங்களைக் கொண்டவர்களுடன் இதைச் செய்வோம், ”என்று ஜையிட் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

“நாம் இதைப் பற்றி விவாதிக்கலாம்… மற்ற கட்சிகளுடன் அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டைச் செய்ய வேண்டும் என்றால், அதில் தீங்கு எங்கே இருக்கிறது? ஆட்சியில் ஒன்றாக அமரலாம். மேலும், இது மக்களுக்கு நமது முதிர்ச்சியையும் நேர்மையையும் காட்டுவதுடன் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளிக்கும்,” என்று அவர் கூறினார்.

அம்னோவை நோக்கிய தப்பான எண்ணத்துடன் கூடிய அனைத்து கருத்துக்களையும் கைவிடுமாறு டிஏபி தலைவர்களை ஜையிட் வலியுறுத்தினார், “அத்தகைய உரையாடல் மலேசியாவை மட்டுமே காயப்படுத்தும்” என்றும்,”அனைத்து மலாய்க்காரர்கள் ஊழல்வாதிகள் என்று கூறுகிறது” என்றும் அவர் கூறினார்.

மலாய் மக்கள் இத்தகைய அறிக்கைகளை எரிச்சலூட்டுவதாகக் கருதுவார்கள்.

கட்சித் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி பிகேஆர் மற்றும் டிஏபி உடனான அணைத்து ஒத்துழைப்பையும் நிராகரித்ததை அடுத்து, மார்ச் மாதம் கட்சியின் பொதுச் சபையில் அம்னோ உறுப்பினர்கள் “அன்வர் வேண்டாம், டிஏபி வேண்டாம்” என்கின்ற முழக்கங்களை எழுப்பினர்.

இருப்பினும், கடந்த செப்டம்பரில் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கும், பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களுக்கும் இடையே ஏற்பட்ட அரசியல் உடன்பாட்டின் வெளிச்சத்தில், இதுபோன்ற நிலைப்பாடு பொருத்தமற்றது என்று பல அம்னோ தலைவர்கள் கூறினர். இஸ்மாயில் அம்னோ துணைத் தலைவர்.

ஜூலை மாதம், இஸ்மாயில் ஒப்பந்தம் நீட்டிக்கப்படாது என்றும் எந்த நேரத்திலும் பொதுத் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்றும் கூறினார்.

பொதுத் தேர்தலில் மக்களின் இதயங்களை வெல்ல புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சமீபத்தில் அம்னோவில் மீண்டும் இணைந்த ஜையிட் கட்சியை வலியுறுத்தினார்.

“என்னைப் பொறுத்தவரை அம்னோ பொதுத் தேர்தலில் சிறப்பாகச் செயல்பட வேண்டுமானால் மாற வேண்டும். மாற்றத்தை கொண்டு வருவதில் நாங்கள் மிகவும் மெதுவாக இருந்ததே நாம் வெற்றியை இழந்ததற்கு ஒரு காரணம். நாங்கள் மக்களின் விருப்பத்திற்கு காது கேளாதவர்களாக இருந்தோம் மற்றும் பழைய கதைகளை கூறிக்கொண்டு மிகவும் வசதியாக இருந்துள்ளோம்.

தேசத்தை பலப்படுத்துவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஜையிட் அழைப்பு விடுத்தார்.

“ஒரு வலுவான மற்றும் நிலையான அரசாங்கத்தை உருவாக்க நாம் ஒன்றாக வேலை செய்ய முடிந்தால், மக்களுக்கு நன்மை பயக்கும் கொள்கைகளை ஒன்றிணைக்க முடியும்.எனது உரிமைகள், உங்கள் உரிமைகள்; என் மொழி, உன் மொழி; என் மதமா, உன் மதமா?”  என்று மெர்டேகாவில் பேசியதைப் போலவே நாங்கள் ஏன் தொடர்ந்து பேச வேண்டும்.

“இந்த தேசத்தை பலப்படுத்தும் ஒரு புதிய வழிக்கு நாம் செல்ல முடியாதா?”.அமைதியும் ஒற்றுமையும் பொறுமையுடன் காக்கப்பட வேண்டும் என்று ஜையிட் தெரிவித்துள்ளார்.

“ஒவ்வொரு இனமும் ஒன்றுபடாமல், நன்மைக்கான பாதையைக் கண்டுபிடிக்காமல், இந்த நாடு முன்னேற முடியாது. அதை அடைய நாம் அனைத்து முக்கியமான கண்ணோட்டங்களையும் நாம் தேர்தெடுக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

 

-FMT