இந்திய-சிங்கப்பூர் அமைச்சர்நிலை வட்டமேசைச் சந்திப்பு – “புதிய அத்தியாயத்துக்கு அடித்தளமாக அமையலாம்”

துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் புதுடில்லியில் நடைபெற்ற அமைச்சர்நிலை வட்டமேசைச் சந்திப்பு சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய அத்தியாயத்துக்கு அடித்தளமாக அமையலாம் என்று கூறியுள்ளார்.

அவர் ஐந்து நாள் பயணம் மேற்கொண்டு இந்தியாவுக்குச் சென்றுள்ளார்.

துணைப் பிரதமராகப் பொறுப்பேற்றபின் அவர் இந்தியாவுக்கு மேற்கொண்டுள்ள முதல் பயணம் இது.

அவரோடு வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங், போக்குவரத்து அமைச்சரும் வர்த்தகத்துக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு. S ஈஸ்வரன் ஆகியோர் சென்றுள்ளனர்.

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் முதலானவர்களை அவர்கள் சந்தித்தனர்.

உணவுப் பாதுகாப்பு, திறமையை மேம்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அவர்கள் பேசினர்.

தமது Facebook பக்கத்தில் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் 57 ஆண்டுக்கும் மேலான அரசதந்திர உறவு, நீண்டகால வரலாற்றுரீதியான, கலாசார, குடும்ப உறவுகள் மூலம் சிங்கப்பூரும் இந்தியாவும் வலுவான பந்தத்தைக் கொண்டிருப்பதாகக் கூறினார். இன்று அவர் குஜராத் செல்கிறார்.

 

 

-smc