ரிங்கிட் வீழ்ச்சியால் போக்குவரத்துத் திட்டங்கள் பாதிக்கப்படவில்லை

அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் சமீபத்திய தேய்மானம், பல பெரிய அளவிலான போக்குவரத்துத் திட்டங்களின் செலவுகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் கூறியுள்ளார்.

இந்த திட்டங்களின் மதிப்புகள் முந்தைய ஒப்பந்தங்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டிருந்ததால், அவை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதற்கு எந்த காரணமும் இல்லை.

“உதாரணமாக, கிழக்கு கடற்கரை ரயில் இணைப்பு ECRL அமைச்சகத்தின் கீழ் நடைபெற்று வரும் அனைத்து திட்டங்களும், விலை நிர்ணயம் செய்யப்பட்டு 30% க்கும் அதிகமான பணிகள் முடிவடைந்துள்ளதால் இவை தொடர்வதில் எந்த சிக்கலும் இல்லை.

“எனவே நாணய மதிப்பில் ஏற்படும் எந்த வீழ்ச்சியும் ஒட்டுமொத்த ஒப்பந்தத்தை பாதிக்காது. திட்டம் அட்டவணைப்படி தொடரும். ECRL திட்டத்தின் கீழ் மொத்தம் 1,076 திட்ட தளங்கள் ஒரே நேரத்தில் செயல்பாட்டில் உள்ளன,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

மாஸ் ரேபிட் ட்ரான்சிட் 2, எம்ஆர்டி 3, ஜெமாஸ்-ஜேபி சென்ட்ரல் மின்மயமாக்கப்பட்ட இரட்டைப் பாதை திட்டம் மற்றும் சிங்கப்பூருக்கு விரைவு போக்குவரத்து அமைப்பு உள்ளிட்ட பிற திட்டங்கள் திட்டமிட்டபடி தொடரும்.

பெரிய அளவிலான திட்டங்களின் செலவுகளை அமைச்சகம் மறுபரிசீலனை செய்யுமா அல்லது ரிங்கிட் மதிப்பிழந்ததைத் தொடர்ந்து அவற்றை ஒத்திவைக்கலாமா என்று வீ கா சியோங்கிடம் கேட்கப்பட்டது.

வியாழன் அன்று அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட் 4.53 என்ற புதிய குறைந்த அளவை எட்டியது.

கடந்த செவ்வாய்கிழமை, நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அஜீஸ், அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு குறைந்தாலும் மலேசியா பொருளாதார நெருக்கடியை சந்திக்கவில்லை என்று கூறினார்.

 

 

-FMT