பிரிட்டன் பவுண்ட்டின் மதிப்பு வரலாறு காணாத சரிவு

பிரிட்டன் நாணயமான பவுண்ட்டின் (Pound) மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்துள்ளது. 1971ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்டிருக்கும்
ஆகப்பெரிய சரிவு.

அமெரிக்க டாலருக்கு நிகரான பவுண்ட்டின் மதிப்பு இன்று காலை சுமார் 4 விழுக்காடு சரிந்தது. பின்னர் அது சற்றே மீண்டது. தற்போது ஒரு பவுண்ட்டின் மதிப்பு ஓர் அமெரிக்க டாலர் 5 காசாக உள்ளது.

சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான பவுண்ட்டின் மதிப்பு 2.56 விழுக்காடு சரிந்து ஒரு வெள்ளி 51 காசாக உள்ளது. பிரிட்டனின் புதிய நிதியமைச்சர் குவாசி குவார்டெங் சர்ச்சைக்குரிய சில பொருளியல் திட்டங்களை அறிவித்திருக்கிறார்.

வரலாறு காணாத வரிச் சலுகைகள், பெரிய அளவில் கடன் பெறுவதற்கான திட்டங்கள் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.

அது பணவீக்கத்தை மேலும் மோசமாக்கும் என்று முதலீட்டாளர்கள் அஞ்சுகின்றனர்.

 

 

-smc