இலங்கை அரசாங்கத்தின் ஆதரவை கோரும் சவுதி அரேபியா

அஜ்லான் குழுமத்தின் பிரதித் தலைவரும், சவுதி அரேபியாவிலுள்ள சவுதி சீன வர்த்தக சபையின் தலைவருமான ஷேக் மொஹமட் அல்-அஜ்லான், இலங்கையில் முதலீடுகள் தொடர்பான உண்மையைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இதன் ஒரு கட்டமாக அவர் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை நேற்று (13.11.2022) சந்தித்துள்ளார்.

25 க்கும் மேற்பட்ட நாடுகளில் முதலீடு

அமைச்சர் சப்ரி, இலங்கையின் பொருளாதார பின்னடைவு மற்றும் துறைமுக நகரத்தில் விருந்தோம்பல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையிலும் சாத்தியமான முதலீட்டு வாய்ப்புகள் குறித்து அவருக்கு விளக்கியுள்ளார்.

ஷேக் மொஹமட், இலங்கையில் நம்பிக்கைக்குரிய துறைகளில் முதலீடு செய்வதற்கு விருப்பம் தெரிவித்ததுடன், அதற்காக இலங்கை அரசாங்கத்தின் ஆதரவையும் கோரியுள்ளார்.

அஜ்லான் குழுமம் சவுதி அரேபியாவில் உள்ள சிறந்த ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றாகும், இது குடியிருப்பு, தொழில்துறை, வணிகத் துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ளது.இந்நிறுவனம் 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் கணிசமான முதலீடுகளை செய்துள்ளது.

 

 

-tw