இலங்கை மக்கள் மீது மேலும் வரிச்சுமையை திணிக்கும் வரவு செலவு திட்டம்!

2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டமானது மக்கள் மீது மேலும் வரிச்சுமையை திணிக்கும் வகையிலேயே உள்ளது.

அதில் மக்கள் நலத் திட்டங்கள் இல்லை என எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன. 2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை முன்வைத்து நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி நேற்று உரையாற்றினார்.

இந்நிலையில் வங்குரோத்தடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்பதற்கான காத்திரமான திட்டங்கள் அதில் இல்லை என எதிரணி எம்.பிக்கள் சுட்டிக்காட்டினர். குறிப்பாக வரி, கடன் மற்றும் விற்பனை ஆகிய மூன்று விடயங்களை மையப்படுத்தியே பாதீடு அமைந்துள்ளது. இதன்மூலம் மக்கள்மீது வரிச்சுமை திணிக்கப்படும். இலாபம் ஈட்டும் அரச நிறுவனங்கள்கூட விற்கப்படும். – என்று அநுர குமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டினார்.

கஞ்சா பயிர்செய்கைக்கு அனுமதிகோரிய டயானாவைதவிர, வேறு எவருக்கும் இந்த பாதீட்டில் நன்மை இல்லை. – என்று டலஸ் அணி சாடியுள்ளது.

நடைமுறைக்கு சாத்தியமற்ற யோசனைகளும் உள்ளன, தேவையற்ற ஒதுக்கீடுகள் இடம்பெற்றுள்ளன என்று பாதீடு குறித்து பிரதான எதிர்க்கட்சியும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

 

 

-ift