அன்வார்: புதிய பிரதமரைத் தேடும் பணி இன்னும் தொடர்கிறது

பக்காத்தான் ஹராப்பனின் வேட்பாளர் அன்வார் இப்ராஹிமின் கூற்றுப்படி, புதிய பிரதமரைத் தேடும் பணி இன்னும் தொடர்கிறது.

இஸ்தானா நெகாராவுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், மாமன்னர் இன்று எந்த முடிவையும் எடுக்கவில்லை, ஆனால் அன்வார் இறுதியில் தனிப்பெரும்பான்மையைப் பெறுவார் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்.

“இப்போதைக்கு, சிறுபான்மை அரசாங்கத்தை அமைப்பது குறித்து எந்தக் கேள்வியும் இல்லை”.

நிறுவப்பட்ட அரசாங்கம் அனைத்து இனங்களையும் அனைத்து பிராந்தியங்களையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். இதன் பொருள் எல்லா வகையிலும் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதாகும்.

“நேற்று நான் குறிப்பிட்ட ஒற்றுமை அரசாங்கத்தின் உணர்வை நான் நன்றியுள்ளவனாக, வரவேற்கிறேன். எனவே, எங்களுக்குச் சிறிது கால அவகாசம் கொடுக்கவும், இதுகுறித்து முடிவெடுக்கப் பரிசீலனை வழங்கவும் மாட்சிமை தங்கிய மன்னரின் கருத்தை நான் ஏற்றுக்கொண்டேன், “என்று அவர் கூறினார்.

இடைக்கால பிரதமராக இருப்பாரா என்ற கேள்விக்கு, இதுவரை அப்படியொரு முடிவு இல்லை என்று அன்வார் கூறினார்.

பிரதமர் பதவிகுறித்த கேள்விக்கு, “சரி, இப்போது ஒரு பணியிடம் காலியாக உள்ளது, அது விண்ணப்பங்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு, சமர்ப்பிக்கப்பட்ட பெயர் அன்வர் இப்ராஹிம்,” என்று நகைச்சுவையாகக் கூறினார்

பதவிக்குத் தனது பெயரைச் சமர்ப்பித்த பிறகு, ஹராப்பான் செயல்முறையை முன்னோக்கி நகர்த்துவதற்குத் தயாராக இருப்பதாகவும், தனிப் பெரும்பான்மையைப் பெறுவதற்கு அவகாசம் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக, அன்வார் மற்றும் PN தலைவர் முகைடின் யாசின் இருவருக்கும் மாமன்னர் சந்திப்புகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசாமல் முகைடின் வெளியேறினார்.

ஹராப்பான் தற்போது 82 எம்.பி.க்களைக் கொண்டுள்ளது, மூன்று எம்.பி.க்களைக் கொண்ட வாரிசன்  ஹராப்பான்-BN கூட்டணியை ஆதரிப்பதாகக் கூறுகிறது. PBM இன் லாரி ஸ்ங்கும்(Larry Sng) ஹராப்பனை நோக்கிச் சாய்வதாகத் தெரிகிறது.

இருப்பினும், தேசியமுண்ணனியின் 30 எம்.பி.க்கள் நடுநிலை வகிக்க முடிவு செய்துள்ளனர், மேலும் ஒரு நம்பிக்கை மற்றும் வழங்கல் ஒப்பந்தத்தின் மூலம் சிறுபான்மை அரசாங்கத்தை ஆதரிக்கத் தயாராக உள்ளனர்.

கோட்பாட்டில், ஹராப்பான், வாரிசன் மற்றும் PBM ஆகியவை இணைந்தால் – 86 எம்.பி.க்களை உருவாக்கும்.

பெரிகத்தான் நேசனலுக்கு 73 எம்.பி.க்களும், சபா சகாவான GRSக்கு ஆறு எம்.பி.க்களும் உள்ளனர்.

மூன்று சபா எம்.பி.க்கள்,  KDM இல் இருந்து இரண்டு பேர் மற்றும் ஒரு சுயேட்சை, PN உடன் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

முன்னதாக, சரவாக்கின் GPS — நேற்று பாரம்(Baram) வெற்றி பெற்ற பின்னர் 23 இடங்களைக் கொண்டுள்ளது- ஆரம்பத்தில் PN-ஐ ஆதரித்தது.

எவ்வாறெனினும், GPS இப்போது யார் பிரதம மந்திரியாக வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதை அரசரிடம் விட்டுவிடப்போவதாகக் கூறியுள்ளது. எனவே, PNக்கான அதன் ஆதரவு இனி உத்தரவாதம் இல்லை என்பதைக் குறிக்கிறது.