உக்ரேனுக்கான ஆதரவை வலுப்படுத்தியிருக்கும் நேட்டோ

நேட்டோ கூட்டணி உக்ரேனுக்கான அதன் ஆதரவை வலுப்படுத்தியிருக்கிறது. உக்ரேனின் முக்கிய உள்கட்டமைப்புமீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்திவருவதால் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

குளிர்காலத்தைத் தனது ஆயுதமாக்க முயல்வதாக நேட்டோ கூட்டணித் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பர்க் (Jens Stoltenberg) குறைகூறியிருக்கிறார்.

கூட்டணியைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள், ரோமானியத் தலைநகர் புக்கரெஸ்டில் (Bucharest) சந்தித்துப் பேசினர். உக்ரேனின் எரிசக்திக் கட்டமைப்பை மீண்டும் வழக்கநிலைக்குக் கொண்டுவர இன்னும் கூடுதலான ஆயுதங்கள் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

மின்சாரப் பொருள்களை வாங்க அமெரிக்கா உக்ரேனுக்கு 53 மில்லியன் டாலரை வழங்க முன்வந்திருக்கிறது.

மின்சாரக் கட்டமைப்பு தாக்கப்பட்டதால் உக்ரேனியர்கள் குளிரில் அவதியுறுகின்றனர். தற்போது மின்சாரத் தேவைகளில் 70 விழுக்காட்டை மட்டுமே பூர்த்திசெய்ய முடிவதாகக் கூறப்படுகிறது.

நாளொன்றுக்கு 6 மணிநேரம் மட்டுமே மின்சாரச் சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

 

 

 

-mm