உலக கோப்பையில் 9 கோல் – மரடோனா சாதனையை முறியடித்த மெஸ்சி

கால்பந்து ஜாம்பவான் என அழைக்கப்படுபவர் டிகோ மரடோனா. அர்ஜென்டினாவுக்கு 1986-ம் ஆண்டு உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தார். அவர் உலக கோப்பையில் 21 ஆட்டத்தில் 8 கோல்கள் அடித்துள்ளார்.

இந்நிலையில், மரடோனாவின் இந்த சாதனையை லியோனஸ் மெஸ்சி நேற்று முறியடித்தார். கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் உலகின் முன்னணி வீரரும், அர்ஜென்டினா கேப்டனுமான மெஸ்சி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு கோல் அடித்தார்.

இதன்மூலம் உலக கோப்பையில் 9 கோல்களை (22 ஆட்டம்) அவர் தொட்டார். உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அர்ஜென்டினா வீரர் கேப்ரியல் பாடிஸ்டுடா ஆவார். அவர் 10 கோல்களை அடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மெஸ்சி உள்ளார்.

 

 

-mm