டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி

டெல்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி பாஜகவிடம் இருந்து மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடரும் நிலையில், மதியம் 2 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி 130 இடங்களில் வெற்றி பெற்று 4 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

பாஜக 99 வார்டுகளில் வெற்றி பெற்று 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் வடகிழக்கு டெல்லியில் உள்ள சீலம்பூர் தொகுதியில் ஷகீலா பேகம் உட்பட 3 சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், உலகின் மிகப் பெரிய கட்சி தோற்கடிக்கப் பட்டதாகவும் கூறியுள்ளார்.

 

 

-mm