விசா ஊழல் குற்றச்சாட்டுகளில் ஜாஹிட் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அரசுத் தரப்பு மேல்முறையீடு

வெளிநாட்டு விசா (VLN) அமைப்புடன் தொடர்புடைய 40 ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து அகமது ஜாஹிட் ஹமிடியை விடுவித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அரசுத் தரப்பு மேல்முறையீடு பிப்ரவரி 17 அன்று  வழக்கு மேலாண்மைக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய வழக்கு மேலாண்மை தேதியை அரசு தரப்புக்கு நெருக்கமான வட்டாரங்கள் மற்றும் அகமட் ஜாஹிட்டின் வழக்கறிஞர் ஹமிடி முகமது நோவைத் தொடர்பு கொண்டபோது உறுதிப்படுத்தினர்.

மேல்முறையீட்டு நீதிமன்ற பிரதிப் பதிவாளர் மொஹமட் கைரி ஹரோன் முன்னிலையில் இந்த முறையீட்டு வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றது.

தற்போது துணைப் பிரதமராக இருக்கும் ஜாஹிட்டின் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும்  விடுவிக்க ஷா ஆலம் உயர் நீதிமன்றம் எடுத்த முடிவை எதிர்த்துக் கடந்த ஆண்டு செப்டம்பர் 26 அன்று அரசு தரப்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு நோட்டீஸை தாக்கல் செய்தது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 24 அன்று உயர் நீதிமன்ற நீதிபதி முகமட் யாசித் முஸ்தபா வழங்கிய தீர்ப்பில், Ultra Kirana Sdn Bhd (UKSB’s) இன் பேரேட்டில் தோன்றிய “Z” மற்றும் “ZH” ஆகியவற்றின் குறியீடுகள் அகமது ஜாஹிட் பணம் அல்லது நன்கொடை பெற்றதை நிரூபிக்கவில்லை என்று கூறினார்.

நீதிபதி (Mohd Yazid) முக்கிய அரசு தரப்பு சாட்சிகள் நம்பகத்தன்மை அற்றவர்கள் மற்றும் நம்பத்தகுந்தவர்கள் அல்ல என்றும் கூறினார்.

சீனா மற்றும்  VLN அமைப்பின் ஒரு நிறுத்த மைய (one-stop centre) சேவையின் ஆபரேட்டராக நிறுவனத்தின் ஒப்பந்தத்தை நீட்டிக்கவும், VLN ஒருங்கிணைந்த அமைப்பை வழங்குவதற்காக உள்துறை அமைச்சகத்துடனான ஒப்பந்தத்தைப் பராமரிக்கவும் உள்துறை அமைச்சர் என்ற முறையில் UKSB இடமிருந்து 13.56 மில்லியன் சிங்கப்பூர் டாலர் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டுக்களை அம்னோ தலைவர் மறுத்தார்.

முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்த ஜாஹிட், அக்டோபர் 2014 முதல் மார்ச் 2018 வரை புத்ராஜெயாவின் செரி சாத்ரியா, புத்ராஜெயா மற்றும் காஜாங்கின் கன்ட்ரி ஹைட்ஸ் ஆகிய இடங்களில் குற்றங்களைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2014 மற்றும் 2017 க்கு இடையில் VLN அமைப்பு தொடர்பாக 13.56 மில்லியன் சிங்கப்பூர் டாலர் லஞ்சம் பெற்றதாக உள்துறை அமைச்சர் என்ற முறையில் குற்றம் சாட்டப்பட்ட தண்டனைச் சட்டத்தின் பிரிவு 165 இன் கீழ் 33 மாற்று குற்றச்சாட்டுகள்  ஜாஹிட் மீது தாக்கல் செய்யப்பட்டது.

மற்ற ஏழு குற்றச்சாட்டுகளுக்காக, அவர் அதே நிறுவனத்திடமிருந்து 1,150,000 ரிங்கிட், 3 மில்லியன் ரிங்கிட், 15,000 சுவிஸ் பிராங்குகள் மற்றும் 15,000 அமெரிக்க டாலர் பணத்தைப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

ஜூன் 2015 மற்றும் அக்டோபர் 2017 க்கு இடையில் காஜாங்கில் உள்ள கன்ட்ரி ஹைட்ஸில் உள்ள ஒரு வீட்டில் குற்றங்களைச் செய்ததாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் 29 அன்று தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில், இந்த வழக்கில் பணம் கொடுப்பதிலும் பெறுவதிலும் லஞ்சம் இருக்கிறதா என்ற கேள்விமீது நீதிபதி முகமது யாசிட் அளித்த தீர்ப்பை எதிர்த்துச் சட்டத்தை மையமாகக் கொண்ட 14 காரணங்களை அரசு தரப்பு சமர்ப்பித்தது.