அம்னோ தேசிய மாநாடு: புதிய அரசியல் அலையில் , மிதக்குமா – மூழ்குமா!   

அம்னோவின் வருடாந்திர மாநாடு  இன்றிரவு முதல் ஒரு “புதிய கதையுடன்” பயணிக்க உள்ளது.

பல ஆண்டுகளாக, அதன் தலைவர்களும் பிரதிநிதிகளும் ஒரே மாதிரியாக ஒரு போர் முழக்கத்தைக் கொண்டிருந்தனர், அவை “அன்வார் வேண்டாம், பக்காத்தான் ஹராப்பான் வேண்டாம் அதோடு டிஏபி வேண்டாம் இல்லை” என்ற முழக்கங்களாகும்.

ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது.  பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பல கூட்டணி அரசாங்கத்தில் அம்னோ அங்கம் வகிக்கும் நிலையில், அம்னோவின் அரசியல் போர் முழக்கம் மாற்றம் காண உள்ளது.

இன்று முதல் சனிக்கிழமை வரை, கட்சியின் தலைமையகம் அமைந்துள்ள உலக வர்த்தக மையமான கோலாலம்பூரின் சுவர்கள், கூட்டாக இருந்து இன்று எதிரியாக மாறிய பெரிக்காத்தான் நேஷனல்-க்கு எதிராக போர்க்குரல் எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

15வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு (GE15) புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக, முன்னாள் எதிரியான ஹராப்பானுடன் இணைந்து செயல்பட கட்சியின் தலைவரும் பிஎன் தலைவருமான அஹ்மட் ஜாஹிட் ஹமிடி ஒப்புக்கொண்ட பிறகு, இது அம்னோவின் முதல் மாநாடு  ஆகும்.

பிஎன்/அம்னோ மற்றும் ஹராப்பான் ஆகிய இரு கட்சிகளும் கடந்த நவம்பர் 19ஆம் தேதி நடந்த தேசியத் தேர்தலுக்குப் பிறகு பேராக் மற்றும் பகாங்கில் எப்படிச் செயல்பட்டதோ, அதேபோல, வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களிலும் ஒன்றாகச் செயல்படுவதற்கான அவரின் முன்னோக்கிய வழியை அவரது முடிவு விளக்குகிறது.

ஹராப்பானுடன், குறிப்பாக டிஏபியுடன் இணைந்து பணியாற்றும் ஜாஹிட்டின் முடிவை, பிரதிநிதிகள் மற்றும் அடிமட்ட மக்களால் எந்த அளவு ஏற்றுக்கொள்வது என்பது சபையில் சோதிக்கப்படும்.

ஒரு குறிப்பிட்ட எதிர்ப்பு எதிர்பார்க்கப்பட்டாலும், எந்தளவுக்கு கருத்து வேறுபாடுகளை தலைமைத்துவம் அனுமதிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அனைவரின் பார்வையும் ஜாஹித் மீதுதான்

அம்னோவின் நலனுக்கான முடிவு (ஹரப்பானுடன் இணைந்து பணியாற்றுவது) மற்றும் எவ்வளவு காலத்திற்கு இந்த கூட்டணியின் கீழ் செயல்படும் என்பதை அவர் எந்த அளவு தனது பிரதிநிதிகளை நம்பவைக்க முடியும், என்பதைப் பார்க்க அனைவரின் கண்களும் ஜாஹித் மீது உள்ளன.

அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி

சில மூத்த தலைவர்கள் ஜாஹிட்டின் தலைமைத்துவத்தில் அதிருப்தியுடன் இருப்பதால், அவரின் தலைவர் பதவிக்கு சவால் விடக்கூடும் என்பதால், கட்சிக்குள்ளேயே பட்டாசு வெடிக்கும் என்பதும் கவனிக்கத்தக்கது.

இவர்களில் முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன், தலைவர்  பதவிக்கு போட்டியிடும் தனது விருப்பத்தையும், அதே போல் முன்னாள் துணை தலைவர்  ஹிஷாமுடின் ஹுசைன் மற்றும் துணை தலைவர்  இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஆகியோரும் இதில் அடங்குவர்.

அம்னோவிற்குள் பிரிவுகள் இருப்பது இரகசியமல்ல, ஜாஹிட்டின் தலைமையை எதிர்க்கும் குழுக்களுக்கு இந்த சூழல் ஒரு சிறந்த நேரமாக இருக்குமா என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும்.

முன்னாள் அம்னோ துணைத் தலைவர் ஹிஷாமுடின் ஹுசைன்

அம்னோ தனது புதிய கூட்டாளிகளான பிகேஆர் மற்றும் டிஏபி உள்ளிட்டோருக்கு மநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது, ஆனால் இதற்கான காரணம் தெரியவில்லை.

மநாட்டில் 6,198 பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அம்னோ “கப்பலில் உள்ள ஓட்டைகளை” சரிசெய்த பிறகு அது தண்ணீரில் மிதக்குமா என்பது சோதிக்கப்படும் நேரமாக இருக்கும்.

அம்னோ முன்னோக்கி நகருமா, மூழ்குமா அல்லது மிதந்து போகுமா என்பது அதன் தலைவர்களின் ஞானம் மற்றும் அடித்தட்டு மக்களின் புரிதல் மற்றும் சகிப்புத்தன்மையின் அளவைப் பொறுத்தாக இருக்கும்.