நேபாளத்தில் நேர்ந்த விமான விபத்து – 68 பேர் மரணம்

நேபாளத்தின் மத்திய பகுதியில் நேர்ந்த விமான விபத்தில் மாண்டோர் எண்ணிக்கை 68 பேருக்கு உயர்ந்துள்ளது. அதில் 72 பேர் பயணம் செய்தனர்.

கடந்த 30 ஆண்டுகளில் நேர்ந்த ஆக மோசமான விமான விபத்து அது எனக் கூறப்படுகிறது. மலைப்பகுதியில் மேற்கொள்ளப்படும் மீட்புப் பணியில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை 30 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னொரு 14 சடலங்களை மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

நேபாளத் தலைநகர் காட்மாண்டிலிருந்து  புறப்பட்டுச்சென்ற Yeti விமானம், பொக்காரா சுற்றுலா நகருக்கு அருகே விழுந்து நொறுங்கியது. விமானத்தில் 68 பயணிகளும் 4 ஊழியர்களும் இருந்தாக நேபாள அதிகாரிகள் கூறினர்.

பயணிகளில் 53 பேர் நேப்பாளத்தைச் சேர்ந்தவர்கள். ஐவர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ரஷ்யாவில் இருந்து நால்வரும், தென் கொரியாவில் இருந்து இருவரும், அயர்லந்து, ஆஸ்திரேலியா, அர்ஜென்ட்டினா பிரான்ஸ் முதலியவற்றில் இருந்து தரப்புக்கு ஒருவரும் விமானத்தில் இருந்தனர்.

பொக்காரா விமான நிலையத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் விமானம் விழுந்து நொறுங்கியதாக நேப்பாள ராணுவம் கூறியது.

விபத்து நடந்தபோது வானிலை தெளிவாக இருந்ததாகவும், எதனால் விபத்து நேர்ந்தது தெரியவில்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

 

 

-smc