நியூசிலந்தின் அடுத்த பிரதமராக கிரிஸ் ஹிப்கின்ஸ் தேர்வு

நியூசிலந்தின் தொழிற்கட்சி திரு. கிரிஸ் ஹிப்கின்ஸைக் (Chris Hipkins) கட்சியின் புதிய தலைவராகவும் நாட்டின் 41ஆவது பிரதமராகவும் தேர்ந்தெடுத்துள்ளது.

தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 64 பேர் சற்று முன்னர் நடத்திய சந்திப்பின்போது அந்த முடிவு எடுக்கப்பட்டது. அவர்கள் எடுத்திருக்கும் முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திரு. ஹிப்கின்ஸ் இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர் கூட்டத்தை நடத்துவார் என்று கூறப்பட்டது.

திருவாட்டி ஜசிண்டா ஆர்டன் (Jacinda Ardern) பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக திடீரென அண்மையில் அறிவித்தார். அடுத்த பிரதமராக பொறுப்பு ஏற்பதற்கு நாட்டை ஆளும் தொழிற்கட்சி திரு. ஹிப்கின்ஸின் பெயரை மட்டும் முன்மொழிந்தது.

திரு. ஹிப்கின்ஸ் 2008ஆம் ஆண்டில் முதன்முதலாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். COVID-19 நோய்ப்பரவலின்போது எடுக்கப்பட்ட அரசாங்க நடவடிக்கைகளில் அவன் முன்னின்று செயல்பட்டார்.

கருத்துக் கணிப்புகளில் தொழிற்கட்சி பின்தங்கியுள்ளது. அக்டோபர் மாதப் பொதுத்தேர்தலில் வெற்றிபெறக் கட்சியின் நற்பெயரை மீட்பதில் திரு. ஹிப்கின்ஸ் கடும் சவாலை எதிர்நோக்கியுள்ளார்.

 

 

-smc