பெண்கள் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் – இலங்கையை எளிதில் வென்றது இந்தியா

முதலில் ஆடிய இலங்கை 59 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 7.2 ஓவரில் 60 ரன்கள் எடுத்து வென்றது.

பெண்களுக்கான முதலாவது ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.

16 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் லீக் சுற்று முடிவில் 12 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. 2-வது சுற்றில் 12 அணிகள் சூப்பர் சிக்ஸ் என்ற அடிப்படையில் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. சூப்பர் சிக்சில் தனது இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையை நேற்று எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 59 ரன்கள் மட்டுமே எடுத்தது.

விஷ்மி குணரத்னே அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் பர்ஷவி சோப்ரா 4 விக்கெட்டும், மன்னட் காஷ்யப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 60 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடம் களமிறங்கிய இந்தியா 7.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சவுமியா திவாரி 28 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சூப்பர் சிக்ஸ் சுற்றின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்தியா தோல்வி அடைந்தது.

 

-mm