120 சட்டவிரோத ஆப்கானிஸ்தான் பிரஜைகளை விடுவித்த பாகிஸ்தான்

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான உறவு மோசமடைந்து வரும் நிலையில், இஸ்லாமாபாத் அரசாங்கம் சிந்து மாகாணத்தில் இருந்து ஆயிரக்கணக்கான ஆவணங்கள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான் பிரஜைகளை விடுவித்துள்ளதாக ஊடகம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமாபாத்தில் உள்ள தலிபான்களின் ஆளுகைக்கு உட்பட்ட ஆப்கானிஸ்தான் தூதரகம் சிந்துவில் முன்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 120 ஆப்கானிஸ்தான் பிரஜைகளை விடுதலை செய்வதாக அறிவித்திருந்தது.

சுமார் 130 ஆப்கானிய கைதிகள் விடுவிக்கப்பட்டதாக அது ட்வீட் செய்தது. இந்த அறிவிப்பின்படி, வரும் நாட்களில் மேலும் பல ஆப்கானிஸ்தான் குடிமக்கள் விடுவிக்கப்படுவார்கள்.

முன்னதாக பாகிஸ்தான் சிறைகளில் இருந்து 1300 ஆப்கானிஸ்தான் அகதிகள் விடுவிக்கப்பட்டதாக தூதரகம் அறிவித்தது. பாகிஸ்தான் அதிகாரிகளின் கூற்றுப்படி, ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது, சட்டப்பூர்வ குடியிருப்பு அனுமதி (விசா) இல்லாததால், பாகிஸ்தான் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 1200 க்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் பிரஜைகளை போலீசார் தடுத்து நிறுத்தி, சமீப காலங்களில் சிறையில் அடைத்ததாக ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம், ஆவணமற்ற கிட்டத்தட்ட 1500 ஆப்கானிஸ்தான் அகதிகள் இன்னும் பாகிஸ்தானில் உள்ள சிறைகளில் இருப்பதாகவும், அவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது.

 

 

-if