மியன்மாரில் 40 நகரங்களில் இனி ராணுவச் சட்டத்தின் ஆதிக்கம்

மியன்மாரில் 8 மாநிலங்களைச் சேர்ந்த 40 நகரங்களில் ராணுவச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

அந்த நகரங்களில் கடந்த சில மாதங்களாக இடைவிடாமல் சண்டை நடைபெறுகிறது. மில்லியன் கணக்கான மக்கள் கடுமையான கட்டுப்பாட்டில் இருக்கின்றனர்.

இரவுநேர ஊரடங்கு நடப்பில் உள்ள நிலையில் மியன்மாரில் நெருக்கடிநிலை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஈராண்டுக்கு முன்பு அரசாங்கத்தை நீக்கிவிட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.

மியன்மாரில் தேச நிந்தனை, வன்முறையைத் தூண்டுதல் போன்ற குற்றங்களை விசாரிக்க ராணுவம் நடுவர் மன்றத்தை நியமிக்கலாம். அங்கு மேல்முறையீடு செய்ய முடியாது.

பாதுகாப்பை நிலைநாட்ட நடவடிக்கை எடுத்திருப்பதாக ராணுவ அரசாங்கம் தெரிவித்தது. ஆனால் நிலைத்தன்மை என்ற பெயரில் ராணுவம் மேலும் மோசமாக நடந்து கொள்வதாகத் தேசிய ஒற்றுமை அரசாங்கம் கூறியது.

தேர்தல் ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும் என்று மியன்மார் ராணுவம் கூறியது. ஆனால் நாடு இன்னமும் இயல்புநிலைக்குத் திரும்பவில்லை என்றும் அது சொன்னது.

 

-smc