ரஷ்யா அமெரிக்காவுடனான அணுவாயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்திலிருந்து தற்காலிக விலகல்

ரஷ்யா, அமெரிக்காவுடன் செய்துகொண்ட அணுவாயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்திலிருந்து தற்காலிகமாக விலகியிருக்கிறது.

அதன் தொடர்பில் பலதரப்பினர் அக்கறை தெரிவித்துள்ளனர். அமெரிக்காவும் ரஷ்யாவும் அந்த ஒப்பந்தத்தை மீண்டும் முழுவீச்சில் பின்பற்றவேண்டும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் கூறுகிறது.

ரஷ்யா அந்த அணுவாயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்திலிருந்த தற்காலிகமாக விலகியது குறித்து நேட்டோ கூட்டணித் தலைவர் யென்ஸ் ஸ்டோல்ட்டன்பர்க் (Jens Stoltenberg) கவலை தெரிவித்தார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் (Antony Blinken) ரஷ்யாவின் நடவடிக்கை பொறுப்பற்றது எனச் சாடியிருக்கிறார்.