வட அமெரிக்காவை வதைக்கும் கடும் பனிப்புயலால் விமானச் சேவைகளுக்கு பாதிப்பு

அமெரிக்காவிலும் கனடாவிலும் கடும் பனிப்புயல் வீசுகிறது. இதனால் வட அமெரிக்காவில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

2,000க்கும் அதிகமான விமானச் சேவைகள் தடைபட்டன. அதனால் ஆயிரக் கணக்கான பயணிகள் பயணத்தைத் தொடரமுடியாமல் தவிக்கின்றனர்.

கனடாவில் கடுங்குளிருக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக வெயில் அதிகம் உள்ள லாஸ் ஏஞ்சலிஸ் (Los Angeles) நகருக்கு அருகிலிருக்கும் பகுதிகளுக்குக்கூடக் கடும் பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மினசோட்டாவின்  சில பகுதிகளில் 2 சுற்று பனிப்பொழிவுகள் ஏற்படும் என அமெரிக்க வானிலை அதிகாரிகள் கணித்துள்ளனர்.

வடகிழக்கிலிருந்து வீசும் பலத்த காற்று நிலைமையை இன்னும் மோசமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைக்குச் சாலைகளில் பயணம் செய்ய வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

ஆனால் தென்பகுதியில் குறிப்பாக ஃபுளோரிடா (Florida) மாநிலத்தில் வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

 

-smc