தேர்தலை நடத்துவதா இல்லையா நாடாளுமன்றமே தீர்மானிக்கும் – நீதிமன்ற தீர்ப்பிற்கு ரணில் பதில்!

இவ்வருடம் தேர்தலுக்கான வருடம் அல்ல, தேர்தலை இவ்வருடம் நடத்த வேண்டிய கட்டாயமும் இல்லை, இது தொடர்பில் நாடாளுமன்றமே தீர்மானிக்கும்.”

இவ்வாறு, சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பில் நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பு தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மக்கள் பிரதிநிதிகளை உச்சமாக கொண்ட ஒரு சபையே நாடாளுமன்றம், எனவே நாடாளுமன்றமே தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும், அதனை மீறி எவரும் செயல்பட முடியாது.

தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அனைவரும் சீரான நிலைப்பாட்டில் இல்லை, ஆளுக்கொரு திசைகளில் பயணிக்கின்றனர்.

இவ்வருடம் தேர்தலுக்கான வருடமும் அல்ல, நாட்டைக் கட்டி எழுப்ப வேண்டிய வருடம் என மீளவும் வலியுறுத்துகிறேன்.” என சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

 

-ib