‘எதிர்க்கட்சி மீதான  விசாரணையில் எனது தலையீடா?’ அன்வார் மறுக்கிறார்

தற்போதைய நிர்வாகம் அடக்குமுறை வழி தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்குகளை நடைமுறைப்படுத்துகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஏதேனும் ஆதாரம் உள்ளதா என்று , பிரதமர் அன்வார் இப்ராகிம் கேட்டார்.

“நான்  விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடைமுறைகளில் அடக்குமுறை மற்றும் குறுக்கீடு செய்கிறேன் என்ற வகையில் கருத்துரைக்க  குர்ஆனைப் பயன்படுத்தாதீர்கள்.”

“நான் எதிர் கட்சி  தலைவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன், நீங்கள் பொறுப்புள்ள முஸ்லிம்களாக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.”

“உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா, யாரையாவது விசாரிக்க அன்வார் தலையிட்டதற்கான ஆதாரம் உங்களிடம் உள்ளதா? இல்லை என்றால்,  அடக்கமாக இருங்கள் – ஒருவரைக் குற்றம் சாட்ட மதத்தைப் பயன்படுத்தக்கூடாது.”

“நான் தலையிடவில்லை, நீங்கள் எம்ஏசிசி மற்றும் அட்டர்னி ஜெனரலைக் கேட்கலாம்… நீங்கள் தலைமை நீதிபதியிடம் கேட்கலாம், நான் எப்போது தலையிட்டு குற்றச்சாட்டுகளை குறைக்க வேண்டும் அல்லது திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டேன்”.

இன்று டேவான் ராக்யாட்டில் பிரதமரின் கேள்வி நேரத்தின் போது, “நான் அவ்வளவு மலிவான அரசியல்வாதி அல்ல” என்று அன்வார் கூறினார்.

கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் சாத்தியமான ஊழலுக்கு எதிராக மேலும் நடவடிக்கை எடுக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதா என்று அஹ்மத் ஃபத்லி ஷாரியின் (பெரிக்காத்தான்  நேஷனல்-பாசிர் மாஸ்) கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

ஃபாத்லி தனது கேள்வியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கைக் குறிப்பிடவில்லை என்றாலும், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவதாக அன்வர் கூறினார்.

அரசியலில் விமர்சனம் செய்வது சகஜம், ஆனால் ஒரு பிரதமர் என்ற முறையில் தனது பதவியின் மீது நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டேன் என்றார்.

“(எம்ஏசிசி)க்கான எனது அறிவுறுத்தல்கள், அட்டர்னி ஜெனரலுக்காக (வழக்கு விசாரணையை முடிவு செய்ய) காத்திருக்க வேண்டும்.

“உண்மைகள் மற்றும் வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் ஒரு மெல்லிய சந்தேகம் கூட அற்ற வகையில் எடுக்கும் எந்த நடவடிக்கையையும் நான் ஆதரிப்பேன் என்று கூறினேன்”, என்று அன்வார் கூறினார்.

போர்க்கப்பல் ஊழல்

அவரது கேள்வியின் போது, துணைப் பிரதமர் அஹ்மத் ஜாஹித் ஹமிடியுடன் தொடர்புடைய ஒரு வழக்கு – கடலோர போர்க் கப்பல்கள் (எல்சிஎஸ்) திட்டத்தின் ஊழலையும் ஃபத்லி வலியுறுத்தினார்.

எல்.சி.எஸ் திட்டம் உட்பட ஊழலை உள்ளடக்கியதாக கூறப்படும் அனைத்து திட்டங்களையும் எந்த தரப்பினருடனும் தொடர்புபடுத்தாமல், எம்.ஏ.சி.சி மற்றும் அட்டர்னி ஜெனரல்  (ஏஜிசி)  நடவடிக்கை எடுக்க வேண்டும் என தான்  அறிவுறுத்தியதாக அன்வார் கூறினார்.

LCS திட்டங்களில் எடுக்கப்பட்ட ஆரம்ப நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பதையும், முழுமையான பின்தொடர்தல் இருக்க வேண்டும் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.