பின்தொடர்வதை குற்றமாக்குவதற்கான திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது

பின்தொடர்வதை குற்றமாக்குவதற்கான திருத்தங்கள் இன்று நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்பிற்காக மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது.

தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (Criminal Procedure Code) ஆகியவற்றுக்கான திருத்தங்கள் முதன்முதலில் கடந்த அக்டோபரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

இருப்பினும், 15 வது பொதுத் தேர்தலுக்கு (GE15) வழிவகுக்கும் வகையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால், தேவான் நெகாராவில் இது அங்கீகரிக்கப்படவில்லை.

திருத்தங்களை இன்று மீண்டும் சமர்ப்பித்த பிரதமர் திணைக்களத்தின் (சட்டம் மற்றும் நிறுவன மறுசீரமைப்பு) அமைச்சர் அசாலினா ஒத்மான் சைட்(Azalina Othman Said) (மேலே) இந்த அமர்வில் இரண்டாவது வாசிப்பு திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

தண்டனைச் சட்டத்தில் ஒரு புதிய பிரிவு 507A ஐ இந்தத் திருத்தங்கள் முன்மொழிகின்றன, இதன் கீழ் ஒரு நபர் மீண்டும் மீண்டும் எந்தவொரு துன்புறுத்தல் செயலின் மூலமும், அத்தகைய செயல் எந்தவொரு நபருக்கும் மன உளைச்சல், பயத்தை ஏற்படுத்த நினைக்கும் எவரும் பின்தொடர்தல் குற்றத்தைச் செய்கிறார்கள்

பின்தொடர்தல் குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.