மகாதீரின் இனவாத மலாய் பிரகடனத்தில் பாஸ், பெர்சத்து கையெழுத்திட்டன!

மகாதீர் புதிதாக உருவாக்கிய மலாய் மக்கள் பிரகடனம் என்பது ஒரு 12 அம்ச ஆவணமாகும், இது மலாய்க்காரர்கள் பொருளாதார ஆளுமையை இழந்து விட்டனர் என்றும்   அதோடு  அரசியல் ஆதிக்கத்தயும் கட்டுப்பாட்டையும்  “இழந்துவிட்டனர்” என்றும் கூறுகிறது.

அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து மலாய்க்காரர்களை ஒன்றிணைத்து மலாய் இனத்தை “புத்துயிர்” மற்றும் “காப்பாற்ற வேண்டும்” என்று அது குறிப்பிடுகிறது.

இந்த புதிய முழுமையான இனவாதத்தை அடிபடையாக கொண்ட பிரகடணத்தை பாஸ் கட்சி ஏற்றுக்கொண்டதோடு, சமயத்தின் அடிப்படையில் அது தகுந்த வழிமுறை என்றது.

மூன்று பெர்சத்து தலைவர்கள் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டின் மலாய் பிரகடனத்தில் தங்கள் தனிப்பட்ட திறனில் கையெழுத்திட்டுள்ளனர்.

பெர்சத்து துணைத் தலைவர் அஹ்மத் பைசல் அசுமு, தகவல் தலைவர் ரசாலி இட்ரிஸ் மற்றும் உச்ச கவுன்சில் உறுப்பினர் இஸ்கந்தர் துல்கர்னைன் அப்துல் காலித்.

யாயாசன் பெர்டானாவில் நடந்த ஒரு நோன்பு துறக்கும் நிகழ்வில் நாங்கள் கலந்து கொண்டபோது நாங்கள் மூவரும் அதில் கையெழுத்திட்டோம் என்று ரசாலி செய்தியாளர்களிடம் கூறினார்.

மலாய் சமூகத்தை ஒன்றிணைத்து காப்பாற்றுவதை இலக்காகக் கொண்ட ஆவணத்தில் வேறு யாராவது பெர்சத்து தலைவர் கையெழுத்திட்டார்களா அல்லது கையெழுத்திட திட்டமிட்டுள்ளார்களா என்பது அவருக்குத் தெரியவில்லை என்று கூறினார்.

நேற்றிரவு மகாதீருடன் நடந்த சந்திப்பிற்குப் பிறகு பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மற்றும் கட்சியைச் சேர்ந்த பல தலைவர்கள் பிரகடனத்தில் கையெழுத்திட்டதாக இன்று முன்னதாக தெரிவிக்கப்பட்டது.

கடந்த வாரம், பாஸ் கட்சியை ஒருமுறை விமர்சித்த மகாதீர், பெரிக்காத்தான்  நேஷனல்க்கான ஆதரவின் பச்சை அலைக்கு மக்கள் பயப்பட வேண்டாம் என்று கூறினார், மலேசியா 60 ஆண்டுகளாக மலாய் பெரும்பான்மை அரசாங்கத்தால் ஆளப்பட்டபோது விரைவான வளர்ச்சியைக் கண்டது என்று சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில், இந்த பிரகடனத்தை இனவாத ஆவணமாக கருத வேண்டாம் என்றும் இது மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கும் முயற்சி என்றும் ரசாலி கூறினார்.

இந்த அறிவிப்பு மலாய்க்காரர்களுக்கு, இது  அவர்களை ஒன்றிணைக்கும் குறிக்கோளுக்கு நல்லது என்று நான் பார்க்கிறேன். இதன் பின்னணியில் எந்த அரசியல் நிகழ்ச்சி நிரலும் இல்லை. இது குறித்து ஏனைய இனத்தவர்கள் கவலைப்பட தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-fmt