தாய்லந்துப் பொதுத் தேர்தல் – அதிகமான இடங்களை வென்றுள்ள எதிர்க்கட்சிகள்

தாய்லந்து நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்த்தரப்பு Move Forward கட்சியும், Pheu Thai கட்சியும் ஆக அதிகமான இடங்களைக் கைப்பற்றியுள்ளன.

14 மே தாய்லந்தில் தேர்தல் நடந்தது.

சில இடங்களில் சூறாவளியால் வாக்கு எண்ணும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. எனினும் அதற்கு முன்பாக 97 விழுக்காட்டு வாக்குகள் எண்ணப்பட்டு விட்டன.

தாய்லந்தில் சுமார் பத்தாண்டு நீடித்த ராணுவ ஆதரவு பெற்ற ஆட்சியை வாக்காளர்கள் நிராகரித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. அடுத்த அரசாங்கத்தை அமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கப்போவதாக Move Forward கட்சித் தலைவர் பீட்டா லிம் ஸாரெர்ன் ராட் (Pita Limjaroenrat) கூறினார்.

Pheu Thai கட்சியுடன் பேசத் தயாராயிருப்பதாகச் சொன்ன அவர், நிச்சயமாகக் கூட்டணி அமையும் என்றார்.

தேர்தல் முடிவுகள்

Move Forward கட்சி 113 இடங்களில் வென்றுள்ளது, 13.5 மில்லியன் வாக்குகளைப் பெற்றுள்ளது.

Pheu Thai கட்சி 112 இடங்களைக் கைப்பற்றியுள்ளது, 10.3 மில்லியன் வாக்குகளைப் பெற்றுள்ளது.

பிரதமர் பிராயுத் சான் ஓச்சாவின் ஐக்கிய தாய்த் தேசியக் கட்சி 23 இடங்களைப் பிடித்துள்ளது, சுமார் 4.5 மில்லியன் வாக்குகளைப்  பெற்றுள்ளது.

 

-sm