அரசாங்கத்திடம் கையேந்த தேவை இல்லை – நாம் ஒன்றிணைந்தால் வெற்றி

அரசாங்கத்தை நம்பி, அரசாங்கத்திற்கு கடிதம் அனுப்புவதன் ஊடாக எம்மால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.

கல்வி மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டிலும் வளம்பொருந்திய இனமாக நாம் மாற்றமடைய வேண்டும்.”

இவ்வாறு, யாழ் தொழில்நுட்பவியல் கல்லூரியில் உரையாற்றும் பொழுது பிரபல தொழிலதிபரும், ஐ.பி.சி தமிழ் ஊடக குழுமத்தின் தலைவருமான கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்தால் வெற்றி

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“தொழில் நுட்ப கல்லூரியில் இருந்து வெளியேறி புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள அனைவரையும் ஒன்றிணைப்பதற்கான முயற்சிகளை நாம் எடுக்க வேண்டும்.

அவர்களை ஒன்றிணைப்பதன் மூலம் பாரிய மாற்றங்களை செய்ய முடியும், அரசாங்கத்திடம் கையேந்த வேண்டிய தேவை இல்லை.

யாழ் தொழில்நுட்பவியல் கல்லூரியானது குறைவான வளங்கள், வசதிகளுடன் இயங்கி வந்தாலும், ஏனைய கல்லூரிகளிலுடன் போட்டி போடும் நிலைக்கு முன்னேறியுள்ளமை பாராட்டத்தக்கது.” என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, யாழ் தொழில்நுட்பவியல் கல்லூரியிடுடைய வளர்ச்சியை எவ்வாறு மேம்படுத்தலாம், புதிய திட்டங்களை எவ்வாறு செயல்படுத்தலாம் என பல அறிவுரைகளையும் வழங்கினார்.

அதேசமயம், தொழில்நுட்ப கல்வியோடு சேர்த்து, எம் இனத்தின் வளர்ச்சியையும் முன்கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கல்லூரி நிர்வாகத்தினரையும் பிரபல தொழிலதிபரும், ஐ.பி.சி தமிழ் ஊடக குழுமத்தின் தலைவருமான கந்தையா பாஸ்கரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

 

-ib