இந்தியாவில் நலிந்து வரும் சர்க்கஸ் தொழில் ஊக்குவிக்கப்பட வேண்டும்

டெல்லியில் 4 நாள் சர்வதேச சர்க்கஸ் திருவிழா நேற்று தொடங்கியது. இதில் இந்தியா, ரஷ்யா, கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாட்டு சர்க்கஸ் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

சர்க்கஸ் திருவிழாவை முன்னாள் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: நகரங்கள் மற்றும் கிராமங்களில் மிகவும் பிரபலமான சர்க்கஸ் தொழில் தற்போது தாக்குப்பிடிக்க முடியாமல் போராடுகிறது. தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் எண்ணற்ற பொழுதுபோக்கு ஊடகங்கள் கிடைப்பதால் நாட்டில் சர்க்கஸ் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று கால ஊரடங்கு காரணமாகவும் இத்தொழில் பெரும் இழப்பை சந்தித்தது. என்றாலும் சர்க்கஸ் இந்தியாவில் தனக்கென ஓர் ஈர்ப்பைக் கொண்டுள்ளது. சர்க்கஸ் பொழுதுபோக்கு ஊடகம் மட்டுமல்ல. பெரிய அளவில் கலைஞர்கள் மற்றும் பிறருக்கு வேலைவாய்ப்பையும் வழங்குகிறது.

எனவே சர்க்கஸ் தொழிலை ஊக்குவிக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு முன்னாள் அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.டெல்லியில் 4 நாள் சர்வதேச சர்க்கஸ் திருவிழாவை முன்னாள் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் சர்க்கஸ் கலைஞர்களுடன் நக்வி.

 

 

-th