சீனாவில் புதுவகை கொரோனா, கோடிக்கணக்கானோர் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை

சீனாவில் புதுவகை கொரோனாவால் வாரந்தோறும் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் இருந்து உருவான கொரோனா, உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், தங்கள் நாட்டில் கட்டுக்குள் உள்ளதாக சீனா தெரிவித்து வந்தது. ஆனால், உண்மையை சீனா மறைக்கிறது என உலக நாடுகள் தெரிவித்து வந்தன.

தற்போது உலக அளவில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ள நிலையில், சீனாவுக்கு கொரோனாவால் மீண்டும் ஆபத்து வருகிறது. வீரியம் மிக்க புதிய வகை கொரோனா அலைக்கு சீனா தயாராகி வருகிறது என்று மூத்த சுகாதார ஆலோசகரின் அறிக்கையை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடங்கள் தெரிவித்துள்ளது.

இந்த புதிய கொரோனா அலை, ஜூன் மாத இறுதியில் உச்சத்தை எட்டக்கூடும், என்றும், இந்த வகை தொற்றால், நாட்டில் வாரத்திற்கு சுமார் 6 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அங்குள்ள மக்களை கதிகலங்கச் செய்துள்ளது.

கடந்த ஏப்ரல் முதல் ஓமிக்ரான் வைரசின் புதிய மாறுபாட்டால், சீனாவில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து இம்மாத இறுதிக்குள் 4 கோடி பேரும், அடுத்த மாத இறுதிக்கும் வாரந்தோறும் 6 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவர் என்று உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

 

-dt