சேவியர்: ஏழை மாணவர்களுக்கு இலவச தொழிற்கல்வி, உடனடியாக மனு செய்யவும்

சிலாங்கூர் மாநில அரசின் உதவியில் 2012 ஆம் கல்வி ஆண்டில் இலவச தொழிற்கல்வி கற்க விரும்பும் ஏழை மாணவர்கள் இப்பொழுதே பதிந்துக் கொள்ளலாம்.
இப்பொழுது பதிவு நடந்துக் கொண்டிருப்பதால் மாணவர்கள் இவ்வாய்பை நன்கு பயன் படுத்திக் கொள்ள முந்திக்கொள்ள வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இது போன்ற பயிற்சிகளில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பை ஆண்டுக்கு நூறு இந்திய மாணவர்களுக்கு சிலாங்கூர் மாநில அரசின் தோட்ட உபக்குழுவின் வழி வழங்கப்படுகிறது.
இதற்காக மாநில அரசு ஆண்டுக்கு சுமார் 10 இலட்சம் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்து வருகிறது.

மாணவர்களுக்கு வாகனம் பழுதுபார்த்தல், மின்சார தொழில்நுட்பம், வாகன குளிர்ச்சாதன தொழில்நுட்பம், குளிர்சாதன பெட்டி செப்பனிடுதல், மின்னியல் தொழில்நுட்பம், கணினி தொழில்நுட்பம், கணினி கிராபிக்டிசைன், தொழில் முறைவரைப்பட தொழில்நுட்பம், தையல், முக அலங்காரம் போன்ற பல துறைகளில் பயிற்சிகள்  வழங்கப்படுகின்றன.

அத்துறைகளில் பயிற்சி பெற்றவர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகள் உண்டு.
ஏற்கனவே இன்பென்ஸ் கல்லூரியில்  பயிற்சி பெற்று வெளியான மாணவர்களும் எனது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளும்படி கேட்டு கொள்கிறோம். ஒரு மாணவருக்கு கல்வியில் முன்னேற ஆர்வமும் அக்கறையுமே முக்கிய தேவை.

இந்த பயிற்சி கோலசிலாங்கூரிலுள்ள  இன்பென்ஸ் கல்லூரியில் நடைபெறுகிறது.  இதில் சேர்ந்து பயனடைய 16 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.  இதற்கான அடிப்படை கல்வி தகுதி எஸ்பிஎம் என்ற போதிலும் தேசிய மொழியில் ஒருவருக்கு உள்ள வல்லமையைக் கொண்டு நேர்முக தேர்வில் தீர்மானிக்கப்படும்.

கடந்த  ஆண்டு எஸ்பிஎம் (SPM) தேர்வு எழுதி, தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் பயிற்சியை இடையில் கைவிட்டு வெளியேறுவது அனுமதிக்கப்படாது. இது ஆர்வமுள்ள மற்ற மாணவர்களின் வாய்ப்பை வீணடிப்பதாகும்.
  
இதன் முக்கிய கட்டுப்பாடாக இருப்பது சிலாங்கூர் மாநிலத்தில் வசிப்போர் பிள்ளைகளுக்கு முதலிடம் வழங்கப்படுவதுடன், தொழில் துறைகளில் சேர்ந்து தொழிற்நுட்ப வல்லுநராக விரும்புவோருக்கு முதலிடம் தரப்படும். ஆறு மாத காலம் நடைபெறும் முதற்கட்ட பயிற்சி முடிந்ததும் மேற்கொண்டு இரண்டாம் கட்ட பயிற்சிக்கு ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதில் நன்கு கல்விகற்று தகுந்த சான்றிதழ்களுடன் வெளிவரும் மாணவர்களுக்கு மேற்கொண்டு கல்வியை தொடர யூனிவர்சிட்டி சிலாங்கூரில்  வாய்ப்பு வழங்கப்படும். ஆகவே ஏழை எதுவும் முடியாது என்ற பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, நம் மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சிறந்த முறையில் பயன் படுத்திக்கொள்ள முன்வர வேண்டும்.
அத்துறைகளில் பயிற்சி பெற்றவர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகள் உண்டு.

ஏற்கனவே இன்பென்ஸ் கல்லூரியில் பயிற்சி பெற்று வெளியான மாணவர்களுக்கு சில துறைகளில் உதவ அவர்கள் (55447306) என்ற எண்ணில் எனது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று சேவியர் அவரது செய்தி அறிக்கையில் கூறியுள்ளார்.