குதப்புணர்ச்சி வழக்கு II தீர்ப்பு: அன்வார் குற்றவாளி அல்ல (விரிவாக)

உயர் நீதிமன்ற நீதிபதி முகமட் ஜபிடின், அன்வாரை விடுதலை செய்து குதப்புணர்ச்சி குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தார். காலை மணி 9.23 அளவில் அந்தத் தீர்ப்பை வழங்கினார்.

டிஎன் ஏ என்ற மரபணுச் சோதனையை நீதிமன்றம் 100 விழுக்காடு ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அதனால் அன்வாரை குதப்புணர்ச்சி குற்றச்சாட்டிலிருந்து நீதிமன்றம் விடுவிக்கிறது என்றும் ஜபிடின் சொன்னார்.

தீர்ப்பைக் கேட்டதும் அன்வாருடைய துணைவியார் டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயில் கண்ணீர் மல்க தமது கணவரைக் கட்டி அணைத்துக் கொண்டார்.