கோர்பாஷேவ்-வைப் பின்பற்றுங்கள் என நஜிப்-புக்கு அறிவுரை

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அம்னோ தீவிரவாதிகளை ஒதுக்கி விட்டு,  அந்நடவடிக்கை அதிகாரத்தை இழப்பதற்கு வழி கோலும் என்றாலும், தமது சீர்திருத்த திட்டங்களை தொடர்ந்து அமலாக்க வேண்டும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சரும் மூத்த அம்னோ தலைவருமான அப்துல் காதிர் ஷேக் பாட்சிர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசாங்க ஊழலையும் நண்பர்களுக்கு உதவும் போக்கையும் கசிவுகளையும் நன்கு அறிந்துள்ள மூன்று மில்லியன் அம்னோ உறுப்பினர்கள் மகிழ்ச்சியாக இல்லை. அவர்கள் “தீவிர மாற்றங்களை” விரும்புவதே காரணம் என்றார் அவர்.

சொந்த நலன்களை மேலாகக் கருதுகின்றவர்களே சீர்திருத்தங்களை எதிர்க்கின்றனர். அவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்? 10,000 பேர்? 5000? அவ்வளவுதான்,” என புதிதாக அமைக்கப்பட்டுள்ள அமானா என்னும் அரசு சாரா அமைப்பின் துணைத் தலைவருமான காதிர் சொன்னார்.

“நஜிப் சரியானதை செய்வதற்கு துணிச்சலைப் பெற்றால் பெரும்பான்மை அம்னோ உறுப்பினர்கள் அவருக்கு உறுதுணையாக இருப்பார்கள்”, என 73 வயது மூத்த அரசியல்வாதி குறிப்பிட்டார். 1970 ஆம் ஆண்டுகள் தொடக்கம் அவர் தீவிர அரசியலில் இருந்து வருகிறார்.

“நஜிப்” ஆர்வத்தைத் தூண்டும் பல அறிக்கைகளை” வெளியிட்டுள்ளதை காதிர் ஒப்புக் கொண்டார். நடப்பு விவகாரங்களை நஜிப் நன்கு அறிந்துள்ளதாகவும் தெரிகிறது என்றார் அவர்.

“ஆனால் நான் பார்க்காதது… அந்த அற்புதமான அறிவிப்புக்களை நான் பாரட்டுகின்ற வேளையில் அவற்றின் அமலாக்கம் போதுமானதாக இல்லை. அப்போது சீர்திருத்தங்களின் உண்மை நிலை குறித்து சந்தேகம் எழுந்து விடுகிறது”, என அவர் மலேசியகினிக்கு வழங்கிய பேட்டியில் கூறினார்.

நஜிப் 2009ம் ஆண்டு பிரதமர் பொறுப்பை அப்துல்லா அகமட் படாவியிடமிருந்து ஏற்றுக் கொண்ட பின்னர் பல தாராள மய நடவடிக்கைகளை அறிமுகம் செய்ததின் மூலம் தம்மை சீர்திருத்தவாதியாகக் காட்டிக் கொள்ள முயலுகிறார்.

ஆனால் அவரது சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு அம்னோ தீவிரவாதிகளும் வலச்சாரிப் போக்குடையவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதனால் நஜிப்பின் முயற்சிகள் அனைத்தும் நிலைகுலைந்து விடுகின்றன.

அதற்கு 2010ம் ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய பொருளாதார வடிவத்தின் இரண்டாவது பகுதியாகும். மலாய் உரிமைப் போராட்ட அமைப்பான பெர்க்காசா தொடுத்த அழுத்தத்தினால் 30 விழுக்காடு பூமிபுத்ரா பங்கு உரிமையை ரத்துச் செய்யவும் முடியவில்லை. சமமான வாய்ப்புக்களுக்கான ஆணையத்தை அமைக்கவும் முடியவில்லை,

வரலாற்று படைத்த தலைவர்களுடன் தலை நிமிர்ந்து நடக்கலாம்

பிரஞ்சு அதிபர் சார்ல்ஸ் டி கால், சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமைச் செயலாளர் மிக்கெயில் தலைவர் கோர்பாஷேவ் போன்ற வரலாற்றுப் புகழுடைய தலைவர்களை நஜிப் பின்பற்ற வேண்டும் என தாம் பிரார்த்திப்பதாக காதிர் சொன்னார்.

“நீங்கள் உங்களுக்கு  பணம் பண்ணும் நோக்கம் மட்டுமே இருந்தால் நீங்கள் உண்மையில் கோல் கம்பத்தை தவற விட்டு விடுவீர்கள்.”

“நீங்கள் மக்களுக்கு செய்வதற்காக அங்கு இருந்து நீங்கள் வெளியேற்றப்பட்டால் பரவாயில்லை. நீங்கள் எதனையும் இழக்கப் போவதில்லை. ஆனால் நீங்கள் தலை நிமிர்ந்து நடக்கலாம்,” என்றார் அவர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தனது காலனிகள் மீதான கட்டுப்பாட்டை பிரான்ஸ் கைவிடுவதற்கு டி கால் வகை செய்தார். அதே வேளையில் கோர்பாஷேவ் வார்சா ஒப்பந்த நாடுகளின் விவகாரங்களில் இராணுவ ரீதியில் தலையிடுமாறு தொடுக்கப்பட்ட அழுத்தங்களைப் புறக்கணித்து சோவியத் யூனியனைக் கலைத்து அரச தந்திர கெடுபிடிப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

“மலேசியாவில் முதலாவது பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானும் நஜிப்பின் தந்தையும் இரண்டாவது பிரதமருமான அப்துல் ரசாக் ஹுசேனும் போராடிய உண்மையான சுதந்திரத்தை நஜிப் மக்களுக்குக் கொடுப்பார் என நான் நம்புகிறேன்.”

“முடிவு எப்படி இருந்தாலும் அவர் பெரிய மனிதாராகப் போற்றப்படுவார். எதிர்காலத் தலைமுறையினருக்காக அவர் உண்மையில் பாடுபட்டால் அவர் தலை நிமிர்ந்து நடக்கலாம்.”

“பெரிய தலைவர்கள் அப்படித்தான் சிந்திக்க வேண்டும்,” என்றார் காதிர்.

அவர் இப்போது அமானாவில் முக்கியப் பங்காற்றி வருகிறார். அதற்கு அம்னோ மூத்த தலைவரும் குவா மூசாங் எம்பி-யுமான தெங்கு ரசாலி ஹம்சா தலைமை தாங்குகிறார்.

காதிர், அம்னோவைத் தோற்றுவித்த உறுப்பினர்களில் ஒருவருடைய மூத்த புதல்வர் ஆவார். ரசாக் நிர்வாகக் காலம் தொட்டு அவர் அம்னோவில் தீவிர ஈடுபாடு கொண்டுள்ளார்.

அவர், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்-டின் கீழ் பண்பாடு, கலை, சுற்றுலா அமைச்சராகவும் அப்துல்லாவின் கீழ் தகவல் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

TAGS: