ஆப்கனில் பெண்கள் படிக்கத்தடை: குடிநீரில் விஷம்

ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகள் படிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடிநீரில் விஷம் கலந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

விஷம் கலந்த நீரை குடித்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆளுநர் முகம்மது ஹூசைன் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் பெண்கள் பள்ளிக்கு செல்வதற்கும், பணிமனைகளில் பணி புரிவதற்கும் தலிபான்கள் தடை விதித்துள்ளனர். அமெரிக்க படைகள் ஆப்கனில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு இந்த தடையை மீறி பெண் குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பப்பட்டதற்கு எதிர்பாக இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.