‘ஒரே மலாய் நாட்டுக்குள், ஒரே மலேசியா வெளிநாட்டில்’

“லண்டனில் துணைப் பிரதமர் முஹைடின் யாசின் தேசிய ஒற்றுமை பற்றிப் பேசுகிறார். இங்கு திரும்பியதும் அவர் வேறு எதனையாவது சொல்வார்”

 

 

லண்டமில் உள்ள மலேசியர்களுக்கு முஹைடின் அவசர வேண்டுகோள்

இரண்டு காசு மதிப்பு: துணைப் பிரதமர் முஹைடின் யாசின் அவர்களே நீங்கள் ஆற்றிய மிகவும் பிரமாதம். அதனை எழுதியவர் யார் ? ஆனால் பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி பற்றி எதுவும் இல்லையே ?  நீங்கள் உத்துசான் மலேசியாவை வாசிப்பது உண்டா ?

அமைதி, வளப்பம், இன ஒற்றுமை- எங்கே ? நீங்கள் எந்த நாட்டைப் பற்றிப் பேசுகின்றீர்கள் ? நாட்டில் சாணியை வீசுவது போதாது என்று வெளிநாட்டுக்குப் போனாலும் அவ்வாறு தான் செய்ய  ண்டுமா ?

தான் கிம் கியோங்: அண்மையில் ஒரே மலேசியாவுக்கு உங்கள் அர்த்தம் என்ன என்று கேட்கப்பட்ட போது நீங்கள்,” முதலில் மலாய்க்காரன் இரண்டாவதாக மலேசியன்” எனப் பெருமையுடன் தந்திரமாகக் குறிப்பிட்டீர்கள்.  

இப்போது பிரிட்டனில் இருக்கும் போது நீங்கள் உங்கள் முந்திய நிலையை விளக்காமல் உங்கள் நிலையை 360 டிகிரி தலைகீழாக மாற்றிக் கொண்டு விட்டீர்கள். நான் உங்கள் பிரகடனத்தில் தீயவற்றைத் தான் காண்கிறேன்.

ஜாம் உபாஉபா: ‘நான் முதலில் மலாய்க்காரன் இரண்டாவதாக மலேசியன்’  என அறிவித்துள்ள துணைப் பிரதமருக்கு அதுவும் இந்த நாட்டில் இன ஒற்றுமையைச் சீர்குலைக்கும் பெர்க்காசாவை அவர் தமது கட்டுக்குள் வைத்திருக்கும் வேளையில் கொஞ்சம் கூட தார்மீகமும் நேர்மையும் கிடையாது. 

முதிய மலேசியன்: எப்படிப்பட்ட வேடதாரி- ஒரே மலாய் நாட்டுக்குள், ஒரே மலேசியா வெளிநாட்டில்.

தாமிக்கா: துணைப் பிரதமர் எந்த ஒற்றுமையைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார். அம்னோ  விடுக்கும் இனவாதக் கருத்துக்கள் சீனர்களையும் இந்தியர்களையும் காயப்படுத்துகின்றன. வரும் பொதுத் தேர்தலில் நீங்கள் பின்பற்றுகின்ற ஒற்றுமை வழி முறையை முயற்சி செய்து பாருங்கள்.  பிஎன், தேர்தலில் மோசடியிலும் ஊழலிலும் ஈடுபடாவிட்டால் நீங்கள், துணைப் பிரதமராக வரவே முடியாது.

“நான் உங்களுக்கு உதவுகிறேன். நீங்கள் எனக்கு உதவுங்கள்” என்னும் வழிமுறை உங்களைக் காப்பாற்றுகிறதா எனப் பார்ப்போம்.

விரால்: துணைப் பிரதமர் அவர்களே உங்களுக்கு சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தும் அளவுக்குத் தகுதி இருக்கிறதா ? இந்த நாட்டில் இன ஒற்றுமை ஐக்கியம், அமைதி ஆகியவற்றைச் சீர்குலைப்பது நீங்கள், அதனை உங்கள் கடந்த கால அறிக்கைகள் மெய்பித்துள்ளன.

இந்த நாட்டில் உங்களைப் போன்ற அரசியல்வாதிகள் இருக்கும் வரையில் அமைதி, ஒற்றுமை, பொருளாதார வளப்பம் ஆகியவற்றை அடைவது முடியாத காரியமாகும்.

வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களாகிய நாங்கள் உங்கள் சொற்பொழிவுக்கு மயங்கும் அளவுக்கு முட்டாள்களும் அல்ல கல்வியறிவு இல்லாதவர்களும் அல்ல.

குடியேறி மலேசியா: ண்டனில் துணைப் பிரதமர் முஹைடின் யாசின் தேசிய ஒற்றுமை பற்றிப் பேசுகிறார். இங்கு திரும்பியதும் அவர் வேறு எதனையாவது சொல்வார்.  “நான் முதலில் மலாய்க்காரன்” என துணைப் பிரதமர் சொல்வதைக் கேட்கும் போது பூமிபுத்ரா அல்லாத ஒருவர் எத்தகைய உணர்வுகளைப் பெற்றிருப்பார் என்பதை அவர் அறிவாரா ?

ஒரே எம்: “நீங்கள் வெளிநாடுகளில் கல்வி கற்கும் மலேசிய மாணவர்களாக இருந்தாலும் சரி, வெளிநாடுகளில் வேலை செய்யும் மலேசியக் குடிமக்களாக இருந்தாலும் சரி, ல்நமது நாட்டில் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிற உருமாற்றத்துக்கு ஒவ்வொருவரும் பங்காற்ற முடியும்.”

ஆம் ஒவ்வொருவரும் அம்னோ/பிஎன்-னுக்கு எதிராக வாக்களிப்பதின் மூலம் பங்காற்றலாம். நாடு அடுத்து உருமாற்றம் பெறும்.