மாட் சாபு, கம்யூனிஸ்ட் தகவல்கள் தொடர்பில் உத்துசான் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்

பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு, தாம் கம்யூனிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களை பாராட்டியதாக தகவல் வெளியிட்டதின் மூலம் தமக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியதாக கூறி அம்னோவுக்கு சொந்தமான மலாய்  நாளேடான உத்துசான் மலேசியா மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இன்று காலை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் அந்த வழக்கு சமர்பிக்கப்பட்டது. அதில் அவர் அந்த ஏட்டின் குழுமத் தலைமையாசிரியர் அப்துல் அஜிஸ் இஷாக்கை முதல் பிரதிவாதியாகவும் அதன் வெளியீட்டாளரான உத்துசான் மிலாயு சென் பெர்ஹாட்டை இரண்டாவது பிரதிவாதியாகவும் மாட் சாபு குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் பொதுவான , சிறப்பான, வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட இழப்புக்களுக்கு  செலவுத் தொகையுடன் இழப்பீடு கோருகிறோம்,” என பாஸ் வழக்குரைஞரான முகமட் ஹனிப்பா மைடின் கூறினார்.

ஆகஸ்ட் 27ம் தேதி நாளேடு வெளியிட்ட முகமட் சாபு பாராட்டிய முகமட் இந்ராவை- ஒரு கம்யூனிஸ்ட் என்னும் தலைப்பிலான கட்டுரை ஒன்று அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“முதல் கட்டுரையைத் தவிர (அந்தக் கூற்றுக்கு ஆதரவாக ) மாட் சாபுவை உண்மையான கம்யூனிஸ்ட் என கானாங் லங்காவ் (தேசிய வீரர்) வருணிக்கும் கட்டுரையும் கம்யூனிஸ்ட்களின் கொடூரங்களை மாட் சாபு புகழ்ந்திருப்பதாக துணைப் பிரதமர் முஹைடின் யாசின் உரையும் ஆகஸ்ட் 28ம் தேதி வெளியிடப்பட்டுள்ளன,” என்று முகமட் ஹனிப்பா இன்று பிற்பகல் நிருபர்களிடம் கூறினார்.

மாட் சாபு சார்பில் தாம் அதே விவகாரம் தொடர்பில் முஹைடினுக்கு எதிராகவும் முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசானுக்கு எதிராகவும் வழக்குகளைத் தாக்கல் செய்யப் போவதாகவும் முகமட் ஹனிப்பா தெரிவித்தார்.

TAGS: