சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு எச்சரிக்கை

இலங்கையில் வெளிநாட்டு நாணய மாற்று வீதம் அதிகரித்துள்ள நிலையில் பண வீக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் திரட்டப்பட்ட மில்லியன் கணக்கான வர்த்தக வங்கிகளின் கடன்களை மத்திய வங்கி தன்னகத்தே கொண்டுள்ளது. இது உள்நாட்டின் நாணய புழக்கத்தை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் புதிதாக நாணயங்கள் அச்சிடப்படுவதும் இலங்கையில் பணத்தின் பெறுமதி வீழ்ச்சி அடைகின்றமைக்குக் காரணம் என சுட்டிக் காட்டியுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரி ஜோன் நெல்மெஸ், இது தொடர்பில் இலங்கை அவதானமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் வெளிநாடுகளின் முதலீடுகள் ஈடுபடுத்தப்படுகின்றமை வரவேற்கத்தக்க விடயம். எனினும், அவ்வாறான பாரிய நிதியினால் ஏற்படுகின்ற சிக்கல்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.