இந்தியாவில் அதிகரிக்கும் இளவயது தற்கொலைகள்

அதிகமானவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதாகவும், தற்கொலை செய்துகொள்பவர்களில் 60 சதவீதம் பேர் 15 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட இளம்பருவத்தினர் என்றும் ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

உலக அளவில் மக்கள் தொகை அடிப்படையில், அதிகபட்சமானவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நாடுகள் குறித்து லான்செட் என்கிற மருத்துவ சஞ்சிகை வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில், இந்தப் பட்டியலில் இந்தியாவும் இருப்பதாக தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் நிகழும் மரணங்களில் மூன்று சதவீதம் தற்கொலையால் நிகழ்வதாக கூறும் லான்செட்டின் ஆய்வறிக்கை, தற்கொலை செய்து கொள்பவர்களில் அறுபது சதவீதமானவர்கள் 15 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட இளம் பருவத்தினர் என்கிற அதிர்ச்சித்தகவலையும் வெளியிட்டிருக்கிறது.