சபாஷ் நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள சிலாங்கூர் அரசாங்கம் விரும்புகிறது

சிலாங்கூரில் நீர் வள, விநியோகிப்புச் சலுகைகளைப் பெற்றுள்ள சபாஷ் நிறுவனத்தின் நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வதற்கான தனது உரிமையைப் பயன்படுத்தப் போவதாக மாநில மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை சபாஷ் அறிவித்துள்ள தண்ணீர் பங்கீட்டு நடவடிக்கைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ள காரணங்களின் உண்மை நிலை குறித்து மாநில அரசாங்கம் சந்தேகம் கொண்டுள்ளதால் தனது உரிமையை அது பயன்படுத்த விரும்புவதாக அவர் சொன்னார்.

மாநிலத்தில் உள்ள ஏழு அணைகளிலும் முழு அளவில் தண்ணீர் நிறைந்திருப்பதோடு நிரம்பி வழிவதாகவும் காலித் இன்று சொன்னார்.

“சலுகை ஒப்பந்தத்தில் உள்ள 32வது பிரிவின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி  சபாஷ் நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள விரும்புவதாக கூட்டரசு அரசாங்கத்துக்கு அறிவிக்க மாநில அரசாங்கம் முடிவு செய்துள்ளது,” என அவர் சொன்னார்.

கூட்டரசு அரசாங்கத்துக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தில் ஒரு தரப்பு என்ற முறையில் கூட்டரசு அரசாங்கம் அதற்கு இணக்கம் தெரிவிக்க வேண்டும். அதே வேளையில் தேசிய நீர் வள நிர்வாகியான Spanனும் இணக்கம் தெரிவிக்க வேண்டும்.

தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுவது ஜோடிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என மாநில அரசாங்க ஆலோசகர்கள் கருதுவதாகவும் காலித் குறிப்பிட்டார்.

 

TAGS: